‘நீண்டகால நோக்கில் திட்டமிடவேண்டும்’

பண­வீக்­கம், வாழ்க்­கைச் செலவு போன்ற உட­னடி பிரச்­சி­னை­களைச் சமா­ளிப்­ப­தற்கு அப்­பா­லும் சிங்­கப்பூர் நீண்­ட­காலத் திட்­டங்­களை வகுக்க வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தனது தேசிய தின செய்­தி­யில் வலி­யு­றுத்­தினார்.

கரை­யோரப் பூந்தோட்­டங்­களில் இருந்­த­படி உரை­யாற்­றிய பிர­த­மர், அந்த இடம் வெறும் கடற்­க­ரை­யாக முன்பு இருந்­த­தைச் சுட்­டி­னார். மரினா சவுத், புதிய நகரமையத்தை அமைக்க 50 ஆண்டு­க­ளுக்கு முன் நிலமீட்பு நட­வ­டிக்­கை­ தொடங்­கியது.

அப்­படி அமை­யும் புதிய நகர மையம் வெறும் அலு­வ­ல­கம், குடி­யி­ருப்புக் கட்­ட­டங்­க­ளாக இருந்­து­வி­டா­மல் பசுமை இடங்­க­ளை­யும் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று திட்­ட­மிட்டு, அதன் விளை­வாக கரை­யோரப் பூந்தோட்­டங்­கள் வடி­வ­மைக்­கப்­பட்டு உரு­வாக்­கப்­பட்­டது என்­பதை திரு லீ குறிப்­பிட்­டார்.

கரை­யோரப் பூந்தோட்­டங்­கள் 2012ல் திறக்­கப்­பட்­டன.

அது முதல் சிங்­கப்­பூ­ரர்­கள் மன­ம­கிழ்ச்­சி­யா­கப் பொழுதை கழிப்­ப­தற்­கும் பெருமை கொள்­வதற்­கும் உரிய ஓர் இடமாக அந்­தத் தோட்­டங்­கள் திகழ்­கின்­றன.

விரை­வில் 'பே ஈஸ்ட் கார்­டன்' பணி­கள் தொடங்­கும். அங்கு நிறு­வ­னர் நினை­வி­டம் அமை­யும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இதுவே சிங்­கப்­பூ­ரில் நாம் செயல்­படும் முறை என்­றார் அவர்.

அடுத்த ஐந்து அல்­லது 10 ஆண்­டு­க­ளுக்கு என்று இல்­லா­மல் 30 முதல் 50 ஆண்டு காலத்­திற்கும் அதற்கு அப்­பா­லும் நாம் திட்­ட­மிட்டு செயல்­ப­டு­கி­றோம் என்­றார்.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், நீண்­ட­காலத் திட்ட மறுபரிசீலனை யைச் சென்ற ஆண்டு தொடங்­கி­யது. அடுத்த கட்ட முன்­னேற்­றத்­திற்கு நாட்டை கொண்டு செல்­வ­தற்­கான யோச­னை­க­ளைப் பெறு­வ­தற்­காக அந்த மறு­ப­ரி­சீலனை­யில் பரந்த அள­வில் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணைய நிலை­யத்­தில் இப்­போது கண்­காட்சி ஒன்று நடக்­கிறது. அது பெரும் மேம்­பா­டு­க­ளுக்­கான கோட்­பா­டு­களை எடுத்­துக்­காட்­டு­கிறது.

அந்­தக் கோட்­பா­டு­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஒட்­டு­மொத்த கன­வு­களை­யும் விருப்­பங்­க­ளை­யும் பிரதி­நி­திக்­கின்­றன என்­றார் அவர்.

நீண்­ட­கால திட்­டங்­கள் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளு­டன் நின்று­வி­டு­வ­தில்லை என்று கூறிய பிரதமர், பொரு­ளி­யல் முன்­னேற்­றத்தையும் சமூக மீள்­தி­ற­னை­யும் கட்­டிக்­காக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்­றார்.

ஒவ்­வொரு தலை­மு­றை­யும் மேம்­பட்ட இலக்­கு­களை துணிச்­ச­லாக நிர்­ண­யிக்க வேண்­டும்.

அந்த இலக்­கு­கள் இன்­னும் சிறந்த சிங்­கப்­பூரை உரு­வாக்க வேண்­டும் என்­றார் அவர்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்­கும் அவ­ரு­டைய நான்­காம் தலை­முறை குழு­வி­ன­ரும் 'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' என்ற செயல்­திட்­டத்தை தொடங்கி உள்ளனர்.

அதில் கலந்­து­கொண்டு யோசனை­க­ளைத் தெரி­வித்து எதிர்­கால சிங்­கப்­பூ­ருக்கு உரு­கொ­டுக்க முன்­வர வேண்­டும் என்று திரு லீ சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!