43 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தேசிய தின அணிவகுப்பு நுழைவுச் சீட்டு

கடந்த 43 ஆண்டுகளாக முயன்றும் கிடைக்காத தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச் சீட்டு இந்த ஆண்டு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ந்தார் திருவாட்டி ரேவதி கிருஷ்ணகோபால்,61.

அண்மையில் தமது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் தேசிய தின அணிவகுப்ப நிகழ்ச்சியை நேரடியாப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர்.

“எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு சிங்கப்பூரராக வாழ்வில் ஒரு முறையாவது தேசிய தின அணிவகுப்பை நேரில் காண வேண்டும் என்ற எனது ஆசை இன்று நிறைவேறியது” என்று பெருமிதம் கொண்டார் அவர்.

திருவாட்டி ரேவதியின் தங்கை திருவாட்டி கல்பனா செங்குட்டுவன்,48, தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டுவிட வேண்டும் என்ற ஆசையில் இதுவரை 28 முறை முயன்றும் கிடைக்காத நுழைவுச்சீட்டு இம்முறை கிடைத்ததை நினைத்து பூரிப்படைகிறார்.

ஒரு சிங்கப்பூரராக வாழ்வில் ஒரு முறையாவது தேசிய தின அணிவகுப்பை நேரில் காண வேண்டும் என்ற எனது ஆசை இன்று நிறைவேறியது
திருவாட்டி ரேவதி கிருஷ்ணகோபால்,61

“எத்தனை முறை தொலைக்காட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்காது. அதிலும் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மனிதநேயத்தின் மகிமையை நாம் உணர்ந்த தருவாயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடியுள்ள இந்நிகழ்வில் பங்குகொண்டது மிகுந்த மார்கிஸ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார். இவர்களுடன் ரேவதியும் 12 வயது பேத்தி தர்ஷினி முரளிதரனும் வந்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!