தோ பாயோ தீ: அணைக்க முடியாமல் வெளியேறிய தம்பதி

தோ பாயோ லோரோங் 8ல் இருக்­கும் புளோக் 222ல் மூன்­றா­வது மாடி நாலறை வீவக வீட்­டில் வெள்ளிக்­கி­ழமை இரவு நேரத்தில் தீ மூண்­டது. முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்­கையாக புளோக்கிலிருந்து 50 பேரை சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப்படை­யும் காவல்­து­றை­யும் அப்­பு­றப்­ப­டுத்­தின.

புகையைச் சுவா­சித்­த­தற்­காக ஒரு­வர் சிங்­கப்­பூர் பொது மருத்து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். மற்­றொ­ரு­வர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்து­விட்­டார்.

இத­னி­டையே, அந்­தத் தீ 30 நிமி­டங்­க­ளுக்­குள் அணைக்­கப்­பட்டுவிட்­ட­தா­க­வும் பாதிக்­கப்­பட்­ட­வர்களுக்கு உதவி வழங்­கப்­படும் என்­றும் பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சக்­தி­யாண்டி சுப்­பாட் தெரி­வித்­தார். தீ விபத்­துக்­கான கார­ணம் பற்றி புலன்­வி­சா­ரணை நடப்­ப­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அந்த புளோக்­கில் குடி இருக்கும் திரு சர­வண மூர்த்தி, 58, என்­ப­வ­ரின் வீட்­டில் மூண்ட அந்­தத் தீயை அணைக்க அந்த ஆட­வ­ரும் அவ­ரு­டைய மனை­வி­யும் 18 வயது மக­னும் முயன்­ற­னர்.

ஆனால், தீயை அணைக்க முடி­யா­மல் போன­தால் அவர்­கள் வீட்­டை­விட்டு வெளி­யே­றி­விட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!