உற்பத்தித்திறனை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்

ஆரம்பகால பாலர்பருவ ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை

மகிழ்ச்­சி­யான ஆசிரியருக்­கும் மகிழ்ச்­சி­யான சிறு­வர்­க­ளுக்­கும் தொடர்­புண்டு. என­வே­தான் ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ ஆசிரியர்­கள், வேலைப்­ப­ளு­வைக் குறைத்து உற்­பத்­தித்­தி­றனை அதி­க­ரிக்க முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

"முக்­கி­ய­மான இரு­த­ரப்­பி­ன­ரால்­தான் நாம் அனை­வ­ரும் வாழ்­வில் வெற்றி அடை­கி­றோம். ஒரு தரப்­பி­னர் பெற்­றோர், மற்­றொரு தரப்­பி­னர் ஆசி­ரி­யர்­கள்," என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி செய்­தி­யாளர்­க­ளி­டம் நேற்று கூறி­னார்.

"நாம் செய்­யும் விஷ­யங்­களில் இவ்­விரு தரப்­பி­ன­ரின் நல­னி­லும் நாங்­கள் கவ­னம் செலுத்தி வரு­கி­றோம். ஏனெ­னில், ஓர் ஆசி­ரி­யர் மகிழ்ச்­சி­யா­க­வும் நன்கு பயிற்சி பெற்­ற­வ­ரா­க­வும் இருந்­தால் மாண­வர்­கள் மகிழ்ச்­சி­யா­க­வும் நன்கு வளர்ச்சி பெறு­ப­வர்­க­ளா­க­வும் இருப்­பர்," என்று அவர் மேலும் சொன்­னார்.

பாலர் பள்ளி ஆசிரியர்­க­ளுக்­காக ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ மேம்­பாட்டு வாரி­யத்­தின் ஆசி­ரி­யர் தினக் கொண்­டாட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, அங் மோ கியோ­வில் உள்ள 'லேர்­னிங் கிட்ஸ்' பாலர் பள்ளிக்கு அமைச்­சர் மச­கோஸ் வரு­கை­ய­ளித்­தார்.

ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ தொழில்­துறை மின்­னி­லக்­கத் திட்­டத்­தின் மூலம், ஆசிரியர்­க­ளின் உற்­பத்­தித்­தி­றனை அதி­க­ரிக்க பாலர் பள்ளி நடத்­து­நர்­க­ளு­டன் சேர்ந்து வாரி­யம் பணி­யாற்றி வரு­கிறது.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் $4 மில்­லி­யன் மதிப்­பில் ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் மானி­யம் தொடங்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, பாலர் பள்ளி நடத்­து­நர்­களில் பாதிப் பேர் மின்னிலக்­கத் தீர்­வு­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர்.

கூடு­த­லான தீர்­வு­கள் கட்­டங்­கட்­ட­மாக சேர்க்­கப்­படும் என்று வாரி­யம் கூறி­யது. ஆசிரியர்­களுக்­கான மின்­னி­லக்க கற்­றல் தள­மும் அதில் அடங்­கும்.

ஆசிரியர்­க­ளின் நல­னுக்கு ஆத­ர­வ­ளித்து, வேலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்­தும் திட்­டங்­களை ஊக்­கு­விக்க, சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­து­ட­னும் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத்­து­ட­னும் சேர்ந்து ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ மேம்­பாட்டு வாரி­யம் செயல்­பட்டு வரு­கிறது.

இது­நாள்­வரை கிட்­டத்­தட்ட 90 பாலர் பள்­ளி­க­ளைச் சேர்ந்த 5,500க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் வேலை­யி­டப் பாது­காப்­புத் திட்­டங்­களில் பங்­கெ­டுத்­துள்­ள­னர்.

வரும் நவம்­ப­ரில் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம் பயிலரங்­கு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யும். பாது­காப்பு, சுகா­தார அபா­யங்­களை அடை­யா­ளம் கண்டு அவற்­றைச் சமா­ளிக்க, பாலர் பள்ளி நடத்­து­நர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­படும்.

கொவிட்-19 நில­வ­ரம் சீரா­கி­வரும் வேளை­யில், பெரும்­பா­லான உட்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணிவது நேற்­று­மு­தல் கட்­டா­யம்­இல்லை.

சுகா­தார இரண்­டாம் அமைச்­ச­ரு­மான திரு மச­கோஸ், பள்­ளி­யில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருப்­பதற்­கும் கிரு­மித்­தொற்­றில் இருந்து பாது­காப்­பாக இருப்­ப­தற்­கும் இடையே சம­நிலை கடைப்பிடிக்­கு­மாறு அனை­வ­ரி­ட­மும், குறிப்­பாக ஆசி­ரி­யர்­கள் மற்­றும் மாண­வர்­களிடம் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!