தமிழ் மொழி இல்லம் எங்கும் ஒலிக்கட்டும்; சமூகம் எங்கும் எதிரொலிக்கட்டும்

உல­கின் செம்­மொ­ழி­க­ளான தமிழ், சீனம் இரண்­டும் அர­ச­மைப்­புச் சட்டத்தின்­படி அதி­கா­ர­பூர்வ ஆட்சி மொழி­களாக இருக்­கும் அரிய பெருமை கொண்ட நாடு சிங்­கப்­பூர்.

ஆங்­கி­லத்தை முக்­கிய பொது மொழி­யா­கக்­கொண்டு, அதோடு, மலாய் மொழியை­யும் அதி­கா­ர­பூர்வ மொழி­யாக அங்கீக­ரித்து, தாய்­மொ­ழி­கள் புழங்­கும் தனிச்­சி­றப்பு பெற்ற நாடாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது.

சிங்­கப்­பூர் கல்வி முறை, இரு­மொழிக் கொள்­கையை நிலை­நாட்டி, மாண­வர்­களை ஆங்­கி­லத்­தோடு தங்­கள் தாய்­மொ­ழி­யை­யும் கற்க வழிவகுத்து, வலி­யு­றுத்தி வருகிறது. கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் இரு­மொ­ழிக் கொள்கை­யின், தாய்­மொ­ழி­யின் முக்­கி­யத்­துவத்தை அண்மையில் தாய்­மொ­ழி­கள் கருத்­தரங்கு ஒன்றில் விளக்­கி­னார்.

பொரு­ளி­யல் ரீதி­யாக உலக மக்­களு­டன் நாம் உரை­யா­டு­வ­தற்­கான அலு­வல் மொழி­யாக ஆங்­கி­லம் அமைந்­தா­லும் தாய்­மொழி நமது சிந்­த­னையை விரி­வ­டையச் செய்­வ­தோடு பரந்த மனப்­பான்­மை­யைத் தரு­கிறது என்றாரவர்.

நமது வேருடன் நம்மைப் பிணைத் திருப்பதுடன் சிங்­கப்­பூ­ரர்­கள் என்ற தனித்து­வ­மான அடை­யா­ள­மாக நம் இரு­மொ­ழிக் கொள்கை இருக்­கிறது என்று கூறிய திரு சான், பல்­லி­னச் சமூ­கத்­தில் தங்­க­ள் பாரம்பரிய மர­பு­களுடன் தங்­க­ளின் தாய்­மொ­ழி­யைப் போற்றும் மக்­க­ளாக சிங்­கப்­பூ­ரர்­கள் இருக்­க­வேண்டும் என்­பதே நம் நோக்­கம் என்­றார்.

சிங்­கப்­பூர்­ தமிழர்கள், மகத்­தான வரலாறும் தொன்­மை­யான மொழிக் கூறு­களும் கொண்ட தமிழ்­மொழியைத் தாய்­மொ­ழி­யா­க இப்பிற­வியில் பெற்றது நமது வரம் என்­பதை அறி­ய­வேண்­டும், உண­ர­வேண்­டும்.

அதோடு, தமிழைத் தொடக்­கப் பள்ளி முதல் பல்­க­லைக்­க­ழ­க இள­நிலை பட்­டப்­படிப்பு வரை படிப்­ப­தற்கு வாய்ப்பு உள்ள, அதற்குப் பொருளியல் ஆதாயமும் இருக்­கின்­ற ஒரு நில­ப்­பரப்பில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம் என்­ப­தை­யும் நாம் உண­ர­வேண்­டும். தமி­ழின் அரு­மை பெருமை­க­ளைச் சொல்லி வரும் நாம், அந்த மொழி நம் நாட்­டில் தழைக்க ஆக்­க­பூர்வ முயற்­சி­களையும் எடுக்­க­வேண்­டும்.

தமி­ழின் சிறப்­பு­களை எடுத்­து­ரைத்து இன்று வாட்ஸ்­அப் வழி வரும் செய்­தி­கள், காணொ­ளி­கள் உள்­ளிட்ட தக­வல்­களைப் பெரு­மை­யு­டன் அனை­வ­ருக்­கும் பகி­ரும் நாம், அதைத் தாண்டி தமிழ்ப் புழக்­கத்தை அதி­க­ரிப்­ப­தில் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.

தமிழ் நிகழ்ச்­சி­களை ஒருங்­கி­ணைப்பது, கலந்­து­கொள்­வது என்­ப­தோடு நின்று விடாமல், வீட்­டில் நம் தமிழ்­மொழி புழக்­கத்­தில் இருப்­பது அடிப்­படைத் தேவை, கட்டாயம் என்பதை உண­ர­வேண்­டும்.

ஒரு பொரு­ளின் பயன்­பாட்டை வைத்தே அதன் முக்கியத்துவம் இருக்கும். அதன் தேவை­யும் நிலைக்­கும், அதி­க­ரிக்­கும். மொழி­கள் அதற்கு விதி­வி­லக்­கல்ல.

ஆகையால் எந்­தெந்த வழி­களில், சூழல்­களில் நம்­மால் முடி­யுமோ தமிழ்­மொ­ழி­யைப் பயன்­பாட்­டில் வைத்­தி­ருப்­பது அவ­சி­யம். பள்­ளி­யில் கற்­கும் பாட­மாக கரு­தா­மல் நம் வாழ்­வின் அங்­க­மாக தாய்­மொழி இருக்­க­வேண்­டும் என்று அமைச்சர் திரு சான் வேண்­டு­கோள் விடுத்­தார்.

ஆங்­கி­லத்தை முதன்மை மொழி­யா­கக் கற்று அத­னால் பொருளியல் ரீதி­யாக சிறந்த தொழில், வேலை வாய்ப்­பு­களை நாம் பெற்று வரு­கி­றோம். அப்­படி வெவ்வேறு துறை­களில் வெற்­றிக்­கொடி நாட்­டிவ­ரும் நாம், போகும் உச்­சத்­திற்­குத் தமி­ழை­யும் கொண்­டு செல்­வது நம் கடமை. மருத்­து­வம், சட்­டம், பொறி­யி­யல், வணிகம், வங்­கித் துறை, தொழில்­நுட்­பம், அர­சி­யல் என்று ஏரா­ள­மான துறை­களில் நம் சமூ­கத்­தி­னர் முத்திரை பதித்து வரு­கின்­ற­னர்.

பணி நிமித்­த­ம் ஆங்­கி­லத்­தில் உரை யாடி, அதைப் புழங்கி வந்­தா­லும் நம் அடை­யா­ளத்­தின் மிக முக்­கிய அங்­க­மான தமிழ்மொழியை இல்­லத்­தில், நண்­பர்­க­ளி­டத்­தில், பொது இடங்­களில், சமூக நிகழ்ச்­சி­களில் பேசி உற­வா­டி­னால், அதுவே தமிழ் மொழியை நம் நாட்­டில் செழிக்க செய்­யும் முயற்­சி­களில் மிக முக்கிய ஒன்­றாக அமை­யும்.

தாய்­மொ­ழியை நாம் கடந்த 15 ஆண்டு ­க­ளாக பள்­ளிப் பரு­வத்­தில் எவ்­வாறு கற்று மதிப்­பெண்­கள் பெற்­றோம் என்று அள­வி­டு­வதை விட்­டு­விட்டு, அடுத்த 50 ஆண்டு­களில் எப்­படி பயன்­ப­டுத்­து­கி­றோம் என்றே பார்க்­க­வேண்­டும் என்று அமைச்சர் சான் அறிவுறுத்தி இருக்­கி­றார்.

இதற்கு சிறு வய­தி­லேயே தாய்­மொழி வித்­தூன்ற­வேண்­டும் என்­றார் அமைச்­சர். தாய்­மொ­ழி­கள் நம் நாட்­டில் செழித்­தோங்க அர­சு எடுத்­து­வ­ரும் முயற்சி­கள் ஏரா­ளம்.

சமூ­கத்­தில் செயல்­பட்­டு­வ­ரும் மொழி, கலை, கலா­சார அமைப்­பு­களும் தங்­களால் முடிந்த அளவு தமிழை அடுத்­த தலை­முறை­யி­ன­ருக்கு எடுத்­துச் செல்ல சேவை­யாற்­றி ­வ­ரு­கின்­றன.

இருந்­தா­லும்­கூட தமிழ்­மொ­ழி­யின் புழக்கம் குறைந்­து வருவதைப் புள்ளி விவரங்­கள் காட்­டு­கின்­றன.

நன்கு வடி­வ­மைக்­கப்­பட்ட கல்­விக் கொள்கை இருந்­த­போ­தி­லும் தமிழ்ப் புழக்கம் குறைந்­து­ வ­ரு­வது வருத்­த­மளிக்­கக்­கூ­டிய போக்கு.

தமிழ்­மொ­ழியை இரண்­டாம் மொழி­யாக இன்று நாம் கற்­று­வந்­த­போ­தி­லும் பள்­ளிக்­கூ­டத்­திற்கு அப்­பால் அதைப் பயன்­ப­டுத்­தாத ஒரு நிலையே அதிகரித்து வரு­கிறது.

அந்த நிலை மாற, நாம் வீட்­டில் தமிழ்­மொ­ழிப் புழக்­கத்தை அதி­க­ரிக்­க­வேண்டும். இந்­தக் கருத்­தும் பல ஆண்­டு­க­ளாக நாம் கேட்டு வந்த ஒன்­று­தான் என்­றா­லும் அதை நாம் மீண்­டும் புதிய கோணத்­தில் பார்க்­க­வேண்­டும்.

இன்று வீட்­டில் பேரப்­பிள்­ளை­களோ, பிள்ளை­களோ ஆங்­கி­லத்­தி­லேயே பேசு­கி­றார்­கள் என்­ப­தால் நாம் அவர்­க­ளி­டத்தில் ஆங்­கி­லத்­தி­லேயே பேசு­கி­றோம்.

குழந்­தை­க­ளுக்கு நாம் சொல்­வது இன்­னும் எளி­தில் புரி­யும் என்று நினைத்து ஆங்­கி­லத்­தில் பேசு­வ­தைப் பழக்­க­மாக்­கிக்கொண்­டி­ருக்­கி­றோம்.

அந்த எண்­ணம் மாறி, தமி­ழில் பேசி புழங்கி அவர்­க­ளுக்­குப் புரிய வைக்­க­வேண்­டும். சித்­தி­ர­மும் கைப்­ப­ழக்­கம் செந்­த­மி­ழும் நாப்­ப­ழக்­கம் என்­பதைச் செயல்­பாட்­டில் காட்­ட­வேண்­டும்.

பிள்­ளை­கள் ஆங்­கி­லத்­தில் உரையாடி னா­லும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா தமிழ்­மொ­ழி­யில் அவர்­க­ளுக்­குப் பதில்­சொல்லி வந்தால் மாற்றத்தைப் பார்க்­கலாம். நாம் தமி­ழில் பேசினால் அவர்களும் தமிழில் பேசி­வி­டு­வார்­களா, என்ன என்று குழம்பிக்கொண்டிருக்காமல் முயற்­சியைத் தொடர்­வோம்.

பல இன நண்­பர்­கள் கொண்ட வட்டத்­தில் தமி­ழில் பேச வாய்ப்­பில்­லா­மல் இருக்கும் குழந்­தை­க­ளுக்குத் தமிழ் நண்­பர்­க­ளைப் பார்க்­கும்­போது தமி­ழில் பேச ஊக்­க­ம­ளிக்­க­வேண்­டும். நம் இல்­லத்­தில் தமிழ் ஒலித்­தால், அது பிள்­ளை­கள் உள்ளத்­தில் தமிழ்ப் பற்றை விதைக்­கும். நம் சமூ­க­மெங்­கும் தமிழ் எதிரொலிக்­கும் சூழல் ஏற்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!