சிங்கப்பூர் இளையரின் மன ஆரோக்கியத்தை மதிப்பிடும் தேசிய அளவிலான ஆய்வு தொடக்கம்

இன்றைய உலகில் இளையர்களுக்கு முன்பைவிட இன்னும் அதிகமாக மனோவியல் சவால்கள் உள்ளன. சீர்குலைந்த நடைமுறைகள், தனிமை அல்லது இணையம் வழி ஆன்லைன் சமூக ஒப்பீடு, மன உளைச்சல் போன்றவை அவர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

இளையர்களில் எத்தனை பேர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், அவர்களை உலுக்கும் பிரச்சினைகள்தான் என்னென்ன, அவர்களை அந்தச் சிக்கலிலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலைமைக்குத் தீர்வு காண மனநலக் கழகம் தனது முதலாவது நாடு தழுவிய விரிவான ஆய்வு ஒன்றைத் தொடங்கியுள்ளது.

15 வயது முதல் 35 வயது வரையிலான சிங்கப்பூர் இளையர்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட விவகாரங்கள், சவால்கள், பொதுவான மனோவியல் பிரச்சினைகள் என அவர்களைப் பாதிக்கும் மன ஆரோக்கிய பிரச்சினைகளைக் கண்டறிய அந்த ஆய்வு முயலும்.

தேசிய இளையர் மன ஆரோக்கிய ஆய்வு எனப்படும் இது, இளையர்களிடையே காணப்படும் மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, புகைப்பிடித்தலுக்கு அடிமையாதல், உணவு உண்ணுதலில் கோளாறு, உடல் தொடர்பான விவகாரம் போன்றவற்றை அலசி ஆராயும்.

இந்தப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட மற்றும் சமூக நிலைமைகளை இந்த ஆய்வு அடையாளம் காணும். தங்கள் பிரச்சினைகளை இளையர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள், எவ்வித சமூக காரணிகளால் பிரச்சினை உண்டாகிறது, அவர்களுக்குக் கிடைக்கும் சமூக ஆதரவு போன்றவை இதன் மூலம் தெரிய வரும் என்றார் மனநலக் கழகத்தின் மருத்துவ இயக்குநர் குழுவின் தலைவரும் இந்த ஆய்வின் இணைத் தலைமை புலனாய்வாளருமான டாக்டர் சுவப்னா வர்மா.

"நாங்கள் கோளாறுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை. மாறாக, உளவியல் துன்பம், மோசமான செயல்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவோம்.

"இந்த வகை பிரச்சினைகள் மாறிக்கொண்டே போகும். அவை வெளிப்படுத்தும் மன ஆரோக்கிய அறிகுறிகளைக் கண்காணிப்போம்," என்றும் கூறினார் டாக்டர் வர்மா.

ஆக இந்த ஆய்வு, மன ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் பற்றியும் இளையர்களின் நல்வாழ்வு பற்றியும் ஆராயும்.

கொடுமைப்படுத்துதல், சுய தீங்கு, மது அருந்துதல், சமூக ஊடகப் பயன்பாடு, திறன்பேசிக்கு அடிமையாதல், மிகுந்த களைப்படைதல், மீள்தன்மை, சுயமரியாதை போன்றவை இளையர்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள்.

"இந்த ஆய்வின் முடிவுகள் மூலம் இளையர்களுக்கு எவ்வித ஆதரவு தேவை என்பதை மனநலக் கழகம் அறிந்து அதற்கு தகுந்த மன ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க உதவியாக இருக்கும்," என்றார் மனநலக் கழகத்தின் மருத்துவ இயக்குநர் குழுவின் (ஆய்வு) உதவித் தலைவர் டாக்டர் மைதிலி சுப்பிரமணியம்.

இந்த ஆய்வுக்கான பணிகள் கடந்த ஆண்டில் தொடங்கியது என்றும் முன்பு நடத்தப்பட்ட சிங்கப்பூர் மன ஆரோக்கிய ஆய்வு, இளையர்களிடையே மன ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டியதால் இந்த ஆய்வு அவசியமாகிறது என்றும் டாக்டர் வர்மா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!