தகுதி இருப்போர் 4வது தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரை

தற்­போ­தைய நில­வ­ரத்­திற்கு ஏற்ப கொவிட்-19 தடுப்­பூ­சிக்­கான புதிய உத்­திக்கு சிங்­கப்­பூர் உரு­மா­று­வ­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுகா­தார அமைச்சு அறி­வித்­தது. அதன் அடிப்­ப­டை­யில் 500க்கும் அதி­க­மா­னோர் ஒன்­று­கூ­டும் நிகழ்­வு­க­ளுக்கு தடுப்­பூசி அடிப்­ப­டை­யில் பின்­பற்­றப்­பட்டு வந்த நடை­முறை நேற்று முன்­தி­னம் (அக்­டோ­பர் 10) முதல் தளர்த்­தப்­பட்­டு­விட்­டது.

இந்­நி­லை­யில், இரண்­டா­வது பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது தொடர்­பாக பொது­மக்­க­ளுக்கு இருக்­கும் சந்­தே­கங்­க­ளுக்கு 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் பதி­ல­ளிக்­கிறது.

இப்­போ­தைக்கு எத்­தனை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்ற கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யில், "அடிப்

­ப­டை­யான இரண்டு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட பிறகு குறைந்­த­பட்­சம் ஐந்து மாதங்­க­ளி­லி­ருந்து பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும்," என பதி­ல­ளிக்­கப்­பட்டு உள்­ளது.

"எத்­தனை தடுப்­பூசி என்­ப­தைக்­காட்­டி­லும் சூழ­லுக்­கேற்ப தடுப்­பூசி என்­பது புதிய அணு­கு­மு­றை­யின் ஒரு பகுதி.

"சளிக்­காய்ச்­ச­லுக்­கான தடுப்­பூசி எவ்­வாறு பரு­வத்­திற்­கேற்ப போடப்­ப­டு­கி­றதோ அதைப்­போல இது­வும் அமை­யும்," என்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

புதிய உத்­தி­யின்­கீழ், அடிப்­

ப­டைப் பாது­காப்­புக்­காக மூன்று தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டி­ருப்­பது அவ­சி­யம்.

இரண்­டா­வது பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வர்­கள் உள்­ளிட்ட 50 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் உடை­ய­வர்­கள் ஆகக் கடைசி தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஐந்து மாதங்­களில் இருந்து ஓராண்­டுக்­குள் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

கேள்வி: அடிப்­ப­டைப் பாது­காப்­புக்­காக இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யும் போட்­டுக்­கொண்ட பின்­ன­ரும் கூடு­தல் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டுமா?

பதில்: 'எம்­ஆர்­என்ஏ' பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளின் ஆற்­றல் நான்கு மாதங்­களில் குறைந்­து­வி­டு­வ­தாக அமெ­ரிக்க நோய் தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தின் ஆய்வு தெரி­விக்­கிறது.

எனவே கூடு­தல் பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­குப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது. குளிர்­கா­லத்­தில் புதிய வகை கொரோனா கிருமி எதிர்­பார்க்­கப்­

ப­டு­வ­தால், தகுதி உள்­ள­வர்­கள் தங்­க­ளுக்­கான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளுமாறு சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தி­ருந்­தார்.

கூடு­தல் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு 50 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் உடை­ய­வர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­படும் அதே­வேளை இதர வய­துப் பிரி­வி­ன­ருக்­கும் இந்தப் பரிந்துரையை நீட்­டிக்­க­லாமா என்­பது குறித்து பின்­னர் பரி­சீ­லிக்­கப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!