தலை தீபாவளிக்கு பிறர் வாழ்வில் ஒளியேற்ற விருப்பம்

அண்­மை­யில் திரு­மண பந்­தத்­தில் இணைந்த உள்­ளூர் பிர­ப­லங்­களான சுதா­ஷினி ராஜேந்­தி­ரன், விஷ்ணு பாலாஜி ஆகிய இரு­வ­ரும் இன்று தங்­க­ளின் தலை தீபா­வ­ளியை ஆர­வா­ர­மின்றி, மன­நி­றை­வ­ளிக்­கும் வண்­ணம் கொண்­டா­டத் திட்­ட­மிட்­டுள்­ளார்­கள். ஒரு தம்­ப­தி­யாக தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டு­வது இதுவே முதல் முறை என்­ப­தால் சமூ­கத்­திற்கு முடிந்­த­ளவு ஏதே­னும் ஒரு­வ­கை­யில் உதவ வேண்­டும் என்ற ஆசை தமக்கு இருப்­ப­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார் சுதா­ஷினி.

இத­னால் விஷ்­ணு­வின் பெற்­றோ­ரது ஆசிர்­வா­தத்­தைப் பெற்று, விருந்­துண்ட பிறகு இரு­வ­ரும் ராம­கி­ருஷ்ண மிஷன் சிறு­வர் இல்­லத்­திற்­குச் செல்கிறார்­கள். அதன் பின்­னர் சுதா­ஷி­னி­யின் குடும்­பத்­தா­ரு­டன் தீபா­வ­ளிக் கொண்­டாட்­டம் தொட­ரும்.

தம்­ப­தி­யர் தாங்­களே தயா­ரித்த தீபா­வளி அன்­ப­ளிப்­புப் பைகளை ராம­கி­ருஷ்ண மிஷன் சிறு­வர் இல்­லத்­தில் கொடுக்­க­வுள்­ள­னர். இதற்கு முன்­ன­தா­கவே சுதா­ஷினி விஷ்­ணு­வு­டன் சேர்ந்து அங் மோ கியோ வட்­டா­ரத்­தி­லுள்ள குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு தீபா­வளி அன்­ப­ளிப்­புப் பைக­ளை­யும் சமை­ய­லுக்­குத் தேவை­யான பொருள்களை­யும் வீட்டு அலங்­காரங்­க­ளை­யும் கொடுக்க விரும்பி­னார். ஆனால் உடல் நலம் குன்­றிய நிலை­யி­லி­ருந்த விஷ்­ணு­வால் வர­மு­டி­யா­மல் போய்­விட்­டது.

எனவே, இன்று ராம­கி­ருஷ்ண மிஷன் சிறு­வர் இல்­லத்­திற்­குச் சென்று அங்­குள்­ளோ­ருக்கு முடிந்­தளவு தீபா­வ­ளிக் கொண்­டாட்ட உணர்வை ஊட்ட ஆவ­லு­டன் இருக்­கி­றார்­கள் ­தம்­ப­தி­யர். ஒவ்­வோர் அன்­ப­ளிப்­புப் பையி­லும் பள்­ளிக்­குத் தேவை­யான பொருள்கள் உள்ளன.

“மக்­க­ளுக்­காக பாடு­வ­தை­யும் தாண்டி நாங்­கள் தொண்­டூ­ழி­யம் புரிந்து சமூ­கத்­திற்கு உத­வு­வது, எங்­கள் திரு­மண வாழ்­விற்கு நல்­ல­தொரு தொடக்­க­மாக அமை­யும் என நம்­பு­கி­றேன்,” என்­றார் விஷ்ணு.

தொடக்­கப் பள்­ளி­யில் பயி­லும் காலத்­தி­லேயே விஷ்­ணு­வும் சுதா­ஷி­னி­யும் ஒரு­வரை ஒரு­வர் பல்­வேறு பாட்­டுப் போட்­டி­களில் சந்­தித்து இருந்­த­தால் அப்­போதே அவர்­கள் நண்­பர்­க­ளா­கி­விட்­ட­னர். ஆனால் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, 2014ஆம் ஆண்­டில் இரு­வரும் பிர­தான விழா­வில் மேடை­யில் பாடி­ய­போ­து­தான் அவர்­க­ளு­டைய நட்பு காத­லாக மலர்ந்­தது.

இசை அவர்­களை இணைத்­தது. இன்­றும் அதே இசை தொடர்ந்து அவர்­க­ளது வாழ்­வில் முக்­கிய அங்­கம் வகிக்­கிறது.

திரு­ம­ணத்­திற்கு முன்­னர் சுதா­ஷி­னி­யும் விஷ்­ணு­வும் தொலைக்­காட்­சிக்­கென மட்­டு­மல்­லா­மல் பல

மேடை­க­ளி­லும் ஒன்­றா­கப் பாடி­ இருக்­கி­றார்­கள், மக்­களை ரசிக்க வைத்­தி­ருக்­கி­றார்­கள். ‘முன்­னேறு வாலிபா’ என்­னும் உள்­ளூர் பாடலை 2017ஆம் ஆண்­டின் தேசிய தின அணி­வ­குப்­பில் தங்­கள் சொந்த பாணி­யி­லும் பாடி­னார்­கள். இருப்­பி­னும் ஊட­கத் துறை­யில் இருப்­ப­தால் தங்­க­ளின் தனிப்­பட்ட உறவை காப்­பது அவ­சி­யம் என்று இரு­வரும் நம்­பி­னர்.

பிர­ப­லங்­க­ளாக இருப்­ப­தால் கட்­டொ­ழுங்கை மறந்­து­வி­டக்­கூ­டாது என வலி­யு­றுத்­தும் இந்­தத் தம்­ப­தி­யர், ஒரு­வ­ருக்கு ஒரு­வர் பக்­க­ப­ல­மாக இருப்­பது மிக முக்­கி­யம் என்­றும் பகிர்ந்­து­கொண்­டார்­கள்.

மேலும், இரு­வ­ரும் பாடும்­போது சிறி­த­ளவு போட்­டித்­தன்மை இருப்

பதும் நல்­ல­து­தான் எனக் குறிப் பிடு­கின்­ற­னர். உதா­ர­ணத்­திற்கு, சுதா­ஷி­னிக்கு ஒரு ‘பிருகா’ செய்ய முடிந்­தால் அதை விஷ்­ணு­வும் செய்து பார்ப்­பார். அதே­போல் சுதா­ஷி­னி­யும் விஷ்ணு பாடு­வதை உன்­னிப்­பா­கக் கவ­னித்து தாமும் அவர் பாடும் நுணுக்­கங்­களை உள்­வாங்கி பாடிப் பார்ப்­பார். இவ்­வாறு இரு­வரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் சவால்­கள் விடுத்து தங்­கள் திறன்­க­ளை­யும் வளர்த்­துக்­கொள்­வ­தில் இன்­பம் காண்­கின்­ற­னர்.

“உள்­ளூ­ரில் எங்­க­ளுக்­குக் கிடைக்­கும் ஆத­ர­வுக்கு நன்­றிக்

கடன் பட்­டி­ருக்­கி­றோம். பிற்­கா­லத்­தில் எங்­க­ளு­டைய பாடல்­கள் உல­க­மெங்­கும் ஒலிக்க நாங்­கள் நிச்­ச­யம் கடி­ன­மாக உழைப்­போம்,” என்­றார் சுதா­ஷினி.

‘வசந்­தம் ஸ்டார்’ பாட்­டுத்­தி­றன் போட்­டி­யில் 2011ஆம் ஆண்­டில் வெற்­றி­வாகை சூடிய சுதா­ஷினி, சொந்­த­மா­கப் பல பாடல்­க­ளைப் பாடி வெளி­யி­டு­வ­து­டன் தற்­போது சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஊட­கத் தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் பணி­பு­ரி­கி­றார். ‘யார் அந்த ஸ்டார்’ போட்­டியை 2007ஆம் ஆண்­டில் வென்ற விஷ்ணு பாலாஜி, ‘கிரேட் ஈஸ்­டர்ன்’ நிறு­வ­னத்­தில் காப்­பு­றுதி, முத­லீட்டு ஆலோ­ச­க­ராக இருக்­கி­றார். நேற்­றி­ரவு ஒளி­ப­ரப்­பான ‘அமர்க்­கள தீபா­வளி’ நிகழ்ச்­சி­யில் பாடி­ய­து­டன் இத்­தம்­ப­தி­யர் இம்­மா­தம் முழுக்க தீபா­வ­ளியை முன்­னிட்டு சமூக மன்­றங்­க­ளி­லும் மேடை­க­ளி­லும் பாடி மக்­களை மகிழ்­விக்க உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!