செய்தியாளராக ஒரு நாள்

ஒரு செய்தியாளருக்கு இருக்க வேண்டிய

அடிப்படைப் பண்புகளைப் பற்றி தமிழ் முரசு

நடத்திய பயிலரங்குவழி மாணவர்கள் அறிந்து, கற்ற உத்திகளைக் கொண்டு நேர்காணலும் நடத்தினர். அவ்வாறு செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேர்காணலுடன் அவர்களின் படைப்புகளும் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.

முன்னாள் மாணவரான மருத்துவர் சமீருடன் ஒரு சந்திப்பு

கிட்­டத்­தட்ட 13 ஆண்­டு­க­ளுக்கு முன் செயிண்ட் ஆன்ட்­ரூஸ் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் தாம் படித்த நாட்­களை எங்­க­ளோடு அமர்ந்­த­வாறு நினை­வு­கூர்ந்­தார் ஊட்­ரம் சமூக மருத்­து­வ­ம­னை­யில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­றும் திரு முகம்­மது சமீர்.

இந்­திய கலா­சார மன்­றத் தலை­வ­ரா­கப் போட்­டி­க­ளுக்­குத் தயார் செய்த நினை­வு­கள்­தான் முத­லில் தம் மன­தில் தோன்­று

வதாக எங்­க­ளி­டம் கூறி­னார். அக்­கா­லத்­தில் போட்­டி­க­ளுக்­கு சக மாண­வர்­க­ளு­டன் சேர்ந்து பயிற்சி செய்­த­தைப் பற்றிப் பேசி­னார்.

"ஜூரோங் தொடக்­கக் கல்­லூரி நடத்­திய வான­வில் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு குறும்­ப­டம் தயா­ரித்­தல், 'ராப்' இசை பாடு­தல், நகைச்­சுவை உரை­யா­டல் எனப் பல பிரி­வு­களில் பரி­சு­கள் வென்­றோம். அது ஓர் இனிய அனு­ப­வ­மா­க­வும் சவால் நிறைந்­த­ கால­கட்­ட­மா­க­வும் அமைந்­தது. பல நாட்­கள் இர­வு­வரை பயிற்சி செய்­வோம். எனக்­குத் தலை­மைத்­து­வப் பண்­பைக் கற்­றுக்­கொள்­ள­வும் தன்­னம்­பிக்­கையை வளர்த்­துக்­கொள்­ள­வும் அதுவே முதல் வாய்ப்­பா­க இருந்­தது. பிற­ரது திறன்­க­ளைக் கண்­ட­றி­ய­வும் உதவியது. நான் நகைச்­சுவை வேடம் ஏற்று நடித்­தேன். நிகழ்ச்­சி­யின் நோக்­கம் தமி­ழின் மேன்­மையை வலி­யு­றுத்­து­வ­தாக இருந்­தது," என்­றார்.

செயிண்ட் ஆன்ட்­ரூஸ் கல்­லூரி ஆசி­ரி­யர்­க­ளைப்­ பற்றி பகிர்ந்து கொண்ட டாக்­டர் சமீர், தனக்­குள் பரந்­து­பட்ட சிந்­த­னையை விதைத்­த­வர்­கள் அவர்­கள் என்­றார். கிணற்­றுத் தவ­ளை­யாக இல்­லா­மல் எல்லா நிலை­க­ளி­லும் மாண­வர்­கள் மேம்­பட அவர்­க­ளின் அறி­வு­ரை­களும் கற்­பித்­தல் முறை­களும் கார­ண­மாக அமைந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எளி­தா­கக் கிடைப்­ப­தைப் பற்­றிக்­கொண்டு செல்­வ­தில் கிடைக்­கும் திருப்­தி­யை­விட போரா­டிப் பெறு­வ­தில்­தான் அதிக மன­நி­றைவு கிடைக்­கும்," என்­றார் அவர்.

"மருத்­து­வப்­ப­டிப்பு எல்லா காலத்­தி­லும் மாண­வர்­க­ளால் விரும்­பப்­படும் ஒன்­றாக உள்­ளது. சமூக அக்­க­றை­தான் இத்­து­றை­யைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­குக் கார­ணம் என்று கரு­து­கி­றேன்," என்று குறிப்­பிட்­டார் அவர்.

கல்­லூரி நாட்­களில் சிக்­க­லுக்­குத் தீர்வு காண்­ப­தில் இருந்த நாட்­டமே பின்­னா­ளில் தனக்கு ஒரு வாழ்க்­கைப் பாட­மாக மாறி­விட்­ட­தென இவர் கரு­து­கி­றார். மேலும், தொடக்­கக் கல்­லூரி காலத்­தில் தான் மேற்­கொண்ட தொண்­டூ­ழி­யப் பணி­கள், தன்­னுள் சேவை செய்­யும் மனப்­பான்­மையை வளர்த்­த­தா­க­வும் இவர் குறிப்பிடுகிறார்.

இந்­நி­லை­யில், இயல்­பா­கவே உயி­ரி­யல் பாடத்­தில் ஆர்­வம், தான் மருத்­து­வத் துறை­யைத் தேர்ந்­தெ­டுக்­கக் கார­ண­மா­னது என்­கிறார்.

"என் கன­வு­களை ஓர­ளவு நன­வாக்­கி­யி­ருந்­தா­லும் என் துறை­யில் மேலும் சாதிக்க விரும்­பு­கி­றேன்," என்று தமது லட்­சி­யத்­தைப் பகிர்ந்து­கொண்­டார் டாக்­டர் சமீர்.

தன்­மு­னைப்பு உரை­க­ளைப் படிப்­ப­தில் தமக்கு அதிக ஈடு­பாடு உண்­டென்­றும் குறிப்­பிட்­டார். தமிழ்ப் பாடத்­தில் எப்­போ­துமே தமக்­குத் தனி நாட்­ட­முண்டு என்­றும் தமிழ் வகுப்­பு­கள் எப்­போ­தும் மகிழ்ச்சி நிறைந்­த­தாக, மகிழ்­வு­டன் கற்­றல் என்­ப­தற்கு இலக்­க­ண­மாக அமைந்­த­தென்­றும் குறிப்­பிட்­டுகிறார் இவர்.

விவா­தங்­களும் எதிர்­வா­தங்­க­ளு­மாய் எப்­போ­தும் வகுப்பை உயி­ரோட்­ட­மாக வைத்­தி­ருப்­பார் தமி­ழா­சி­ரி­யர் முனை­வர் ரா­ஜ­கோ­பா­லன் என்­றார் சமீர். அத­னால் தமிழ்ப் பாடம் சலிப்பு தட்­டா­மல் ஆர்­வ­மூட்­டும் வகை­யில் அமைந்­தி­ருந்­த­தா­க­வும் கூறி­னார்.

'வலி இல்­லா­மல் வழி இல்லை' என்­ப­தற்­கேற்ப உழைப்­பில்­லா­மல் உயர்­வில்லை என்ற எண்­ணத்தை இளை­யர்­கள் மன­தில் நிறுத்­திக்­கொள்ள வேண்­டும் என்கி­றார் சமீர். நல்ல தமி­ழில் உரை­யா­டு­வ­தில் தனக்கு எப்­போ­துமே தயக்­க­மில்லை என்­றும் தமிழ் மொழி மீது இன்­ற­ள­வும் அதிக ஈடு­பாடு உண்டு என­வும் கூறுகிறார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!