எழுத்தாளர் விழா: கலந்துரையாடல்களில் கவனம்பெற்ற உத்தமர் காந்தியும் உணவுக் கலாசாரமும்

அனுஷா செல்­வ­மணி

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழாவை ஒட்டி நடை­பெற்ற இரண்டு கலந்­து­ரை­யா­டல்­கள் மகாத்மா காந்தி பற்­றி­யும் சிங்­கப்­பூர் உண­வுக் கலா­சா­ரம் பற்­றி­யும் கருத்­துப் பரி­மாற்­றங்­க­ளுக்கு வகை­செய்­தது.

இரண்டு நிகழ்ச்சிகளும் சென்ற சனிக்­கி­ழமை ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் நடை­பெற்றன.

முதலாவது, 'காந்­தி­யும் நானும்: சுனில் கிருஷ்­ண­னு­டன் ஒரு நேர்­கா­ணல்' எனும் நிகழ்ச்சி.

காந்­தி­யைத் தந்­தை­யா­கக் கரு­தும் இவர், நவீன இலக்­கி­யப் படைப்­பு­களில் அவ­ரைக் கொண்­டு­வர முனைந்­துள்­ளார். இந்­திய சுதந்­தி­ரத்­துக்­கா­கப் போரா­டிய நிலை­யில் காந்­தி­யின் வாழ்க்கை ஒரு துய­ரக் காவி­ய­மாக இருந்­தா­லும் போராட்­டத்­தையே கலை­யாக மாற்­றி­ய­வர் மகாத்மா காந்தி என்­றார் திரு சுனில் கிருஷ்­ணன். எழுத்­து­ல­கில் பல பரி­மா­ணங்­க­ளைக் கொண்­டுள்ள இவர், காந்தி குறித்த தனிப்­பட்ட தக­வல்­களை வழங்­கும் www.gandhitodaytamil.com எனும் இணை­யத்­த­ளத்­தின் ஆசி­ரி­யர்.

அந்­தக் காலத்­தி­லேயே பரு­வ­நிலை நெருக்­க­டியை அறிந்த காந்­தி­யின் போராட்ட வழி­மு­றை­கள், தனித்­து­வம் வாய்ந்­தவை. அவ­ரு­டைய உப்பு யாத்­திரை, அதற்கு சிறந்த எடுத்­துக்­காட்டு என்று கூறும் இவரை, சிங்­கப்­பூர்க் கவி­மாலை அமைப்­பின் தலை­வர் இன்பா நேர்­கா­ணல் செய்­தார்.

மற்­றொரு கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி, சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யத்­திற்கு நாட்­டின் உண­வுக் கலா­சா­ரம் எவ்­வாறு சுவை­யூட்­டு­கிறது என்­பதை விரி­வாக அல­சி­யது. 'உணவு இன்­றேல்: சிங்­கப்­பூர்த் தமிழ் வாழ்­வும் இலக்­கி­ய­மும்' எனும் தலைப்­பி­லான கலந்­து­ரை­யா­டலை சஜினி நாயுடு நெறிப்­ப­டுத்­தி­னார். சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர்­கள் வசுந்­தரா, முக­மது காசிம் ஷாந­வாஸ், முக­மது அலி ஆகி­யோர் தங்­கள் கருத்­து­க­ளைச் சுவை­பட எடுத்­துக்­கூ­றி­னர்.

சிங்­கப்­பூ­ரில் கிடைக்­கும் உணவு, உணர்­வு­க­ளைத் தூண்­ட­வல்­லது. இந்­தியா, மலே­சியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து இங்கு வந்த நம் முன்­னோர்­கள் சமைத்து உண்ட உணவு வகை­கள் இப்­பொ­ழுது, பல மாற்­றங்­கள் கண்டு நம் நாவில் தவழ்­கின்­றன என்­றார் 'மாஸ்டர் செஃப் 2' போட்டியாளருமான வசுந்­தரா.

சிங்­கப்­பூர் வந்த புதி­தில் 'கோபி-ஓ' வாங்­கும்­போது, தவ­று­த­லாக சிங்­கப்­பூ­ரில் பேச்­சு­வ­ழக்­கில் கூறப்­படும் 'கேப்போ' என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­திக் கடைக்­கா­ர­ரின் கோபத்­துக்கு ஆளான சம்­ப­வத்­தின் தூண்­டு­த­லில் 'அயல் பசி' எனும் கட்­டுரை வடித்த ஷாந­வாஸ், இங்­குள்ள அங்­கா­டிக் கடை­க­ளைத் தம் உரை­யில் நினை­வூட்­டி­னார். வித­வி­த­மான உணவு வகை­களை வீட்­டில் சமைத்­துச் சாப்­பி­டு­வ­தை­போன்ற சுவை­யில் அங்­கா­டிக் கடை­களில் ருசிக்­க­லாம் என்­றார் அவர்.

தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களை எழு­தித் தயா­ரிக்­கும் முக­மது அலி, உணவு இல்லை என்­றால், நம் இலக்­கி­யம் என்ன ஆகும் என்­ப­தைப் பற்­றிக் கருத்­து­ரைத்­தார். உணவு பல­த­ரப்­பி­ன­ரை­யும் நம் வாழ்­வில் இணைக்­கிறது என்­றார் அவர்.

நம் உட­லுக்கு அடிப்­ப­டை­யா­கத் தேவைப்­படும் அரிசி போல, உண­வின்றி நாம் எவ்­வாறு இணைய முடி­யும் என வினா எழுப்­பி­ய­து­டன், உணவு இல்­லா­விட்­டால் நம் கலா­சா­ர­மும் அடை­யா­ள­மும் அழிந்­து­வி­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

வாழ்க்­கை­யைப்­போ­லவே இலக்­கி­யத்­தி­லும் தாக்­கம் ஏற்­ப­டுத்­து­கிறது உணவு என்­ற­னர் பங்­கேற்­பா­ளர்­கள்.

படங்கள்: அனுஷா செல்வமணி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!