14வது மாடியில் இருந்து சைக்கிளை வீசிய ஆடவருக்குச் சிறைத்தண்டனை

மனை­வி­யு­டன் ஏற்­பட்ட வாக்­கு­வாதத்­திற்­குப் பிறகு சினம் தணி­யாத ஆட­வர் 14வது மாடி­யில் இருந்து சைக்­கிளை வீசி­ய­தற்­காக அவ­ருக்கு ஒரு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சுவா சூ காங் கிர­செண்ட் வட்­டார வீட்­டில் வசிக்­கும் 26 வயது முக­மது நூர் இஸு­வான் நூர்­தீன் மற்­ற­வர்­க­ளின் பாது­காப்­புக்கு பங்­கம் விளை­விக்­கும் செய­லைச் செய்­ததை ஒப்­புக்­கொண்­டார்.

சென்ற ஆண்டு ஜன­வரி 23ஆம் தேதி மாலை­யில் நூருக்­கும் அவ­ரது மனை­விக்­கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அவர்­க­ளது திரு­மண வர­வேற்­புக்கு எந்த ஆடையை அணி­வது என்­ப­தன் தொடர்­பில் இருவரும் சண்டையிட்டனர்.

அதன்­பி­றகு சினத்­து­டன் வீட்டை விட்டு வெளியேறிய நூர், அங்கே நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த மஞ்­சள் நிற சைக்­கி­ளைக் கண்­டார். கோப மிகு­தி­யில் 25 கிலோ­கி­ராம் எடை­யுள்ள அந்த சைக்­கி­ளைக் கீழே வீசி­னார். பொது­மக்­க­ளின் புகா­ரை­ய­டுத்து விசா­ரணை செய்த காவல்­து­றை­யி­ன­ரி­டம் நூர் முத­லில் தான் அவ்­வாறு செய்­ய­வில்லை என்று பொய்­யு­ரைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மற்­ற­வர்­க­ளின் பாது­காப்­புக்கு பங்­கம் விளை­விக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு ஆறு மாதம் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ $2,500 வரை­யி­லான அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!