சாதித்தது சாங்கி: 2022ல் ஆசிய பசிபிக்கில் முதலிடம் பிடித்தது

சிங்­கப்­பூ­ரின் சாங்கி அனைத்­து­லக விமான நிலை­யம், இந்த ஆண்டை வெற்­றி­க­ர­மா­ன­தாக முடித்து ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தின் ஆகப் பெரிய விமான நிலை­ய­மாக சாதனை நிகழ்த்தி இருக்­கிறது.

மீட்சி எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட மெது­வாக இருக்­கும் என்ற போதிலும் அது இந்­தச் சாத­னையை நிகழ்த்தி உள்­ளது.

சாங்கி விமான நிலை­யம் டிசம்பர் நடுப்­ப­கு­தி­யில் கையாண்ட பய­ணி­க­ளின் வாராந்­திர எண்­ணிக்கை, கொவிட்-19க்கு முன்பிருந்த அள­வில் 75%ஐ எட்டி­விட்­டது. இந்த அளவு கடந்த மார்ச் மாதம் 18% ஆக இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சாங்கி விமான நிலை­யத்­தின் நான்கு முனை­யங்­களும் இப்­போது செயல்­ப­டு­கின்­றன. அவை பய­ணி­களைச் சீரான எண்­ணிக்­கை­யில் கையாண்டு வரு­கின்­றன.

முனை­யம் 4 செப்­டம்­பர் மாதம் திறக்­கப்­பட்­டது. முனை­யம் 2ன் தெற்­குப் பகுதி அக்­டோ­ப­ரில் செயல்­ப­டத் தொடங்­கி­யது.

இவற்­றின் கார­ண­மாக சாங்கி விமான நிலை­யம் ஆண்­டுக்கு 70 மில்­லி­யன் பேரைக் கையா­ளக்­கூடிய ஆற்­ற­ல் நிலைக்கு மீண்டும் திரும்­பி­யது.

சாங்கி விமான நிலை­யத்­தின் உல­கத் தொடர்­பு­களைப் பொறுத்­த­வரை அவை கொவிட்-19க்கு முந்திய நிலை­யில் 82% அள­வுக்கு இப்­போது திரும்­பி­விட்­டன.

டிசம்­பர் நில­வ­ரப்­படி 95 விமான நிறு­வ­னங்­கள் சாங்கி விமான நிலை­யத்­தில் இருந்து 140 நகர்­க­ளுக்­குச் சேவை­யாற்­றின. அவற்­றில் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் பய­ணி­கள் செல்ல முடி­யா­மல் இருந்த இந்­தி­யா­வின் புனே, மலே­சி­யா­வின் சிபு உள்­ளிட்ட புதிய நான்கு இடங்­களும் உள்­ள­டங்­கும்.

எட்டு புதிய விமான நிறு­வ­னங்­களும் சேவை­க­ளைத் தொடங்­கின. இவை எல்­லாம் சேர்ந்து ஆசி­யா­வின் விமா­னப் போக்­கு­வ­ரத்து மையம் என்ற நிலையை சாங்கி விமான நிலை­யம் மீண்­டும் எட்ட கைகொ­டுத்து இருக்­கின்­றன.

அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­க­ளு­டன் ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில், ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தில் சாங்கி விமான நிலை­யம்­தான் முத­லி­டத்­தில் இருக்­கிறது.

மீட்­சி­யைப் பொறுத்­த­வரை தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் சரா­சரி அள­வை­விட சாங்கி 10% அதி­க­மாக முன்­னி­லை­யில் இருக்­கிறது.

கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலை­யில் 69 விழுக்­காடு அள­வுக்கு சாங்கி நவம்­ப­ரில் திரும்­பி­விட்­டது.

சாங்கி விமான நிலை­யம் ஆசி­ய பசி­பிக்­கி­லேயே ஆகப் பெரிய அனைத்­து­லக விமான நிலை­ய­மாக இந்த ஆண்­டின் முடி­வில் திக­ழும் என்­பது பல மாதங்­க­ளுக்கு முன்பே தெள்­ளத்­தெ­ளி­வாகத் தெரி­ய­வந்து­விட்­டது என்று சுயேச்சை பகுப்­பாய்­வா­ள­ரான பிராண்­டன் சோபி கூறு­கி­றார். இதைப் பொறுத்­த­வரை கடந்த 2019ல் சிங்­கப்­பூர் 3வது இடத்­தில் இருந்­தது.

ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தி­லேயே ஆகப் பெரிய அனைத்­து­லக விமான நிலை­ய­மாக சாங்கி இப்­போது திகழ்­கிறது. ஆனால், இதை வைத்து சாங்கிதான் ஆக அதிக வேகத்­தில் மீட்சி கண்ட நிலை­யம் என்று கூறி­விட முடி­யாது.

தெற்கு ஆசி­யா­வி­லும் மத்­திய ஆசி­யா­வி­லும் செயல்­படும் சிறிய விமான நிலை­யங்­கள் சாங்­கி­யை­விட வேக­மாக மீட்சி கண்­டுள்­ளன.

அதே­போல, தென்­மேற்­குப் பசி­பிக்­கில் செயல்­படும் சிட்னி போன்ற ஒரு சில நிலை­யங்­களும் வேக­மாக மீட்சி கண்­டுள்­ளன. உல­க­ள­வில் துபாய் தான் தொடர்ந்து ஆக சுறு­சு­றுப்­பு­மிக்க அனைத்­து­லக விமா­ன­நி­லை­ய­மாக இருக்­கிறது.

லண்­டன், பாரிஸ் விமான நிலை­யங்­கள் இதில் அடுத்­த­டுத்த இடங்­களைப் பெறு­கின்­றன.

ஆசி­ய பசி­பிக் வட்­டா­ர­மும் சிங்­கப்­பூ­ரும் மீட்சி கண்டு வரும் போதி­லும் இந்த ஆண்டு முழு­வதுமே விமான நிறு­வ­னங்­க­ளுக்­கும் நிலை­யங்­க­ளுக்­கும் தொடர்ந்து சிர­ம­மான ஆண்­டா­கவே இருந்தது.

சென்ற ஆண்­டின் ஜன­வரி முதல் அக்­டோ­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டின் முதல் 10 மாதங்­களில் சாங்கி விமா­ன நிலை­யம் வழி வந்து சென்ற பய­ணி­க­ளின் மொத்த எண்­ணிக்கை 23.6 மில்­லி­ய­னா­கத்­தான் இருக்­கிறது. இது 2019ஆம் ஆண்டு அள­வில் 42%தான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!