வாடகை வீட்டில் வசித்த 700 குடும்பங்களுக்கு சொந்த வீடு

2022ஆம் ஆண்டின் நிலவரம் பற்றி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தகவல்

அர­சாங்க வாடகை வீடு­களில் வசித்த 700க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள், 2022ஆம் ஆண்­டில் சொந்த­மாக வீடு வாங்­கி­ய­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தெரி­வித்­தது.

அவற்­றில் சில குடும்­பங்­கள், இதற்­காக ‘புதுத் தொடக்க வீட்டுத் திட்­டம்’ என்ற மானியத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­தின.

இத்­திட்­டம் 2016ஆம் ஆண்­டில் தொடங்­கிது. வாடகை வீடு­களில் வசிக்­கின்ற, இளம் பிள்­ளை­களுடன் கூடிய குடும்­பங்­கள் இரண்­டா­வது முறை­யாக வீடு­வாங்க இது உத­வு­கிறது.

வாடகை வீடு­களில் வசித்து வந்த 7,800க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் கடந்த 10 ஆண்­டு­களில் வீடு­க­ளைச் சொந்­த­மாக வாங்கி இருக்­கின்­றன. மேலும் 2,300 குடும்­பங்­கள் வீடு­களை வாங்க பதிவு செய்து உள்­ளன.

சென்ற ஆண்­டில் சொந்த வீடு வாங்­கிய 700க்கும் மேற்­பட்ட குடும்­பங்­களில் 10ல் ஏழு குடும்­பங்­கள் வீவ­க­வி­டம் இருந்து வீடு வாங்­கின. மற்­றவை மறு­விற்­பனை வீட்டை வாங்­கின.

ஏறக்­கு­றைய மூன்­றில் இரண்டு பங்கு குடும்­பங்­கள் $80,000 வரை மானி­யம் பெற்­றன.

பிப்­ர­வ­ரி­யில் தொடங்­கும் பிடிஓ வீடு விற்­பனையில் இருந்து, வாட­கைக் குடும்­பங்­கள், ‘புதுத் தொடக்க வீட்­டுத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி குறைந்த குத்­த­கைக் காலத்­தைக் கொண்டுள்ள மூவறை வீட்­டை­யும் வாங்கலாம்.

இப்­போது இத்­த­கைய குடும்­பங்­களுக்கு ஈரறை நீக்­குப்­போக்கு வீடு­கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

இத்­திட்­டத்­தின்­படி கிடைக்கும் வீடு­க­ளின் குறைந்தபட்ச குடி­யிருப்­புக் காலம் 20 ஆண்­டு­கள் ஆகும். இத்­திட்­டத்­திற்­கான மானி­யம் 2022 மே மாதம் முதல் $35,000லிருந்து $50,000க்கு அதிகரிக்கப்பட்­டது.

இத­னி­டையே, வாடகை வீட்டில் வசிக்­கும் குடும்­பங்­களில் பல குடும்­பங்­கள் சொந்த வீடு வாங்க விரும்­பு­வ­தா­க­வும் ஆனால் பல சூழ்­நிலைகள் கார­ண­மாக அவற்றுக்கு அது பெரும் சவாலாக இருப்­ப­தா­க­வும் தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைசல் இப்­ரா­கிம் குறிப்­பிட்­டார்.

அத்­த­கைய குடும்­பங்­க­ளைச் சமூக இணைப்­புச் செயல்­திட்­டத்­தில் சேர­வைத்­தால் அதன் மூலம் அவர்­க­ளுக்கு நன்­மை கி­டைக்­கும் என்று அவர் கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!