சிங்கப்பூர் குடும்பங்களின் நிகர சொத்து மதிப்பு 2வது காலாண்டில் கூடியது

சிங்கப்பூர் குடும்பங்கள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் அதிக வட்டி விகிதத்தையும் சமாளித்து இந்த ஆண்டின் முதல் பாதியில் நிதி ரீதியில் நல்ல நிலையில் தொடர்ந்து இருந்து வந்தன.

இருந்தாலும் வருங்காலத்தில் ஆபத்துகள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பணவீக்கம், வட்டி விகித சவால்கள் தொடர்ந்து இருந்து வருவதையும் பொருளியல் மந்தம் ஏற்பட்டுவிடக் கூடிய அச்சம் தொடர்வதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் குடும்பங்களின் நிகர சொத்து மதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட $2.7 டிரில்லியனாக இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.9% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகரச் சொத்து மதிப்பு என்பது சொத்துகளின் மதிப்புக்கும் கடன் பொறுப்புகளுக்கும் இடைப்பட்ட வேறுபாடாகும்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் குடும்ப சொத்து மதிப்பு 8.2% கூடியது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த அதிகரிப்பு சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டில் 6.7% ஆக இருந்தது.

புள்ளிவிவரத் துறை சென்ற வாரம் வெளியிட்ட தகவல்கள் மூலம் இது தெரியவருகின்றன.

குடும்பங்களின் நிதி சொத்துகளின் மதிப்பு அதிகரிப்பை ஆண்டுக்காண்டு அடிப்படையில் இரண்டாவது காலாண்டு நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதிச் சொத்துகளில் பங்குகள் முதல் ஆயுள் காப்புறுதி, வங்கி வைப்புத் தொகைகள் எல்லாம் உள்ளடங்கும்.

இந்த வளர்ச்சி 6.6% ஆக இருந்தது. அதேவேளையில், நிதிச் சாராத சொத்துகள் அதாவது வீடு போன்ற சொத்துகளின் மதிப்பு 9.1% ஆக இருந்தது.

சிங்கப்பூர் குடும்பங்கள் ஜூன் 30ஆம் தேதி வரைப்பட்ட மூன்று மாத காலத்தில் பங்குகளிலும் பங்குப் பத்திரங்களிலும் அதிக பணத்தை முதலீடு செய்தன.

இதனிடையே, இதன்தொடர்பில் கருத்து கூறிய ஓசிபிசி சொத்து ஆலோசனைப் பிரிவுத் தலைவர் ஆரோன் சுவீ, ஒவ்வொரு மாதமும் வருவாயில் குறைந்தபட்சம் 20 விழுக்காட்டு தொகையை ஓய்வுகாலம், பிள்ளைகளின் கல்வி போன்றவற்றுக்காக குடும்பத்தினர் முதலீடு செய்து வரவேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

பங்குகள் போன்ற ஆபத்து அதிகம் உள்ள சொத்துகளில் முதலீடு செய்வதற்கு முன் யாரும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்பட வேண்டும் என்று ஜென் ஃபைனான்சியல் அட்வைசரி என்ற நிறுவனத்தின் நிர்வாக நிதிச் சேவை ஆலோசகர் திருவாட்டி லீ மெங் கூறினார்.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்கள் தங்கள் காப்புறுதிப் பாதுகாப்பை அதிகமாக்கின. ஆயுள் காப்புறுதி ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.4% விரிவடைந்தது.

இதைப் பொறுத்தவரை நான்கு காலாண்டுகளாக வளர்ச்சி இல்லாத சூழ்நிலை இருந்து வந்தது.

இது பற்றி கருத்து கூறிய திரு சுவீ, சிங்கப்பூரர்கள் பலரும் காப்புறுதிப் பாதுகாப்பு என்பது, வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய முதலீட்டைப் போல் அல்லாமல் செலவு வைக்கக்கூடிய ஒன்று என்று இன்னமும் கருதுகிறார்கள் என்று கூறினார்.

குடும்பத்தினருக்குப் போதிய அளவுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!