சிங்டெல்லுக்குச் சொந்தமான ஆப்டஸின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

சிங்டெல்லுக்குச் சொந்தமான ஆஸ்திரேலியாவின் ஆப்டஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகியுள்ளார்.

நவம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிங்டெல் இதனைத் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் ஆப்டஸின் சேவை பாதிக்கப்பட்டதால் ஏறக்குறைய 12 மணி நேரத்திற்கு பத்து மில்லியன் ஆஸ்திரேலியர்கள் கைபேசித் தொடர்பு, இணையத் தொடர்பு இல்லாமல் திண்டாடினர்.

இதையடுத்து கெல்லி பேயர் ரோஸ்மரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகினார்.

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஆப்டஸ் தலைமை நிதி அதிகாரி மைக்கல் வென்டர் தற்காலிகமாக அப்பொறுப்பில் இருப்பார் என்று சிங்டெல் தெரிவித்தது

முன்னாள் ஸ்டார்ஹப் தலைமை நிர்வாக அதிகாரியான காலியாரோபவ்லோஸ் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு ஆப்டஸ் வர்த்தக நிர்வாக இயக்குநராக இருந்த அவர், நவம்பர் 22ஆம் தேதி மீண்டும் ஆப்டஸ் நிறுவனத்தில் இணைகிறார் என்றும் திரு வென்டரின் கீழ் அவர் பணியாற்றுவார் என்றும் சிங்டெல் அறிக்கை தெரிவித்தது.

“ஆப்டஸ் மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியசிமாகிறது. அண்மைய சேவைத் தடைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை நிறுவனத்தின் குழு எடுத்து வருகிறது,” என்று சிங்டெல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுவென் குவான் மூன் அறிக்கையில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!