பழைய இடத்துக்கு மாறும் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தின் கூரைகள்

முன்னாள் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் நடைமேடைகளின் மேற்கூரை விரைவில் மீண்டும் முழுமையாக இணைக்கப்படவிருக்கிறது. ஜூலை 2023 முதல் சுமார் 70 விழுக்காடு மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த 63 நடைமேடை விதானப் பலகைகளில் கடைசியாக இரண்டு விதானங்களும் வெட்டி இடமாற்றம் செய்யப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 15 அன்று அதன் முந்தைய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.

1931ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு இன்று தேசிய நினைவுச் சின்னமாக விளங்கும் முன்னாள் ரயில் நிலையத்தின் வரலாறு மற்றும் நினைவுகளுக்கு அதன் கட்டமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் கேன்டோன்மன்ட் ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடையாளமாக விளங்கும் விதானங்கள் மீண்டும் நிறுவப்படும் என்று 2016ல் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

மறுநிர்மாணப் பணியில் புதிய நடைமேடைகளைக் கட்டுவதும் மழைநீர் குழாய்கள் அமைப்பதும் உள்ளடங்கும். இப்பணி 2025 ஆகஸ்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நிலப் போக்குவரத்து ஆணையம், வட்ட ரயில் பாதையின் 6வது கட்டப் பணி பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

எண்பது விழுக்காடு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்தப் பாதையின் அமையும் கெப்பல், கேண்டோன்மண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய மூன்று நிலையங்களும் திட்டமிட்டபடி 2026ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மார்ச் 12ஆம் தேதியன்று ஆணையம் தெரிவித்தது.

வட்ட ரயில் பாதை விரிவாக்கப் பணிகளுக்காக முந்தைய தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தின் நடைமேடை மேற்கூரைகள் வெட்டி எடுக்கப்பட்டு அருகில் உள்ள இடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்போது பழைய இடத்துக்கே மேற்கூரைகள் மாற்றப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!