‘கிங்கு ஜின்செங்’ மிட்டாயில் இரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் ஆண்களுக்கான பாலியல் வீரிய மருந்து கலக்கப்பட்டுள்ளது தெரியவந்திருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மிட்டாயை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு உணவு அமைப்பு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மலேசியாவில் உருவான இந்த மிட்டாயில் டடாலாஃபில் எனும் ஆண்களிடையே பாலியல் வீரியத்தை எழுப்பும் மருந்து இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) வெளியிட்ட அறிக்கையில் அமைப்பு கூறியது.
டடாலாஃபில், மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே வழங்கப்படும் ஒன்று என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த ஜின்செங் மிட்டாய், ஆண்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று பல்வேறு மின்வர்த்தகத் தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த விளம்பரங்களை அகற்ற சிங்கப்பூர் உணவு அமைப்பு சம்பந்தப்பட்ட தளங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.
இந்த மிட்டாயை விற்பதை நிறுத்திக்கொள்ளுமாறும் அமைப்பு சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களைக் கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூர் மின்வர்த்தகத் தளங்களான ஷாப்பி, லஸாடா, கரோசல் ஆகியவற்றில் ‘கிங்கு ஜின்செங்’ மிட்டாய் விற்கப்படவில்லை என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.