கிருமி தடுக்கிறது; வியாபாரம் படுக்கிறது

கஃப் ரோட்­டில் மூன்­றாண்­டு­க­ளாக ‘ஆம்­பூர் பிரி­யாணி’ உண­வ­கத்தை நடத்தி வரும் திரு முத்­து­சாமி, இரு வாரங்­க­ளுக்கு முந்­திய ஞாயி­றன்று எதிர்­கொண்ட வியா­பார வீழ்ச்­சியை இது­வரை அவர் சந்­தித்­தி­ருக்­க­வில்லை.

கொவிட்-19 கிரு­மித்தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் ஊழி­யர்­கள் தங்­கும் விடு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யே­றா­மல் இருப்­பது கூட்­டம் குறைந்­தி­ருப்­ப­தற்கு ஒரு கார­ணம் எனக் கரு­தும் திரு முத்துசாமி, கிட்­டத்­தட்ட 80% வியாபாரச் சரிவை எதிர்­நோக்­கு­கி­றார். செல­வைச் சமா­ளிக்­கும் வழி­களை ஆராய்ந்து வரு­கி­றார்.

வாடகை, ஊழி­யர் கிடைப்­பது, ஊழி­யர் சம்­ப­ளம், போட்­டித்­தன்மை போன்ற பல சவால்­களை லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது.

கடைவீடுகளுக்கும் வாடகை சலுகை

லிட்­டில் இந்­தி­யா­வில் கடை வாடகை அதி­க­மாக இருந்­த­போதும், வியா­பா­ரம் செழிப்­பாக இருந்து வந்­த­தால் வர்த்­த­கர்­க­ளால் சமா­ளிக்க முடிந்து வந்­தது. ஆனால், தற்­போ­தைய மந்­த­நிலை அவர்­களை விழி­பி­துங்க வைத்­துள்­ளது.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க வர்த்­த­கர்­க­ளுக்கு வழங்­கப்­படும் உத­வி­களில் ஒன்­றாக, அர­சாங்க அமைப்­பு­க­ளால் நிர்­வகிக்­கப்­படும் இடங்­க­ளுக்கு வாடகை சலுகை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேக்கா நிலைய கடை­க­ளுக்கு இது ஓர் உத­வி­யாக உள்­ளது.

முதல் தளத்­தில் ஈரச்­சந்தை, உண­வங்­காடி கடை­க­ளுக்கு ஒரு மாத வாடகை தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார் தேக்கா நிலை­யத்­தில் கடந்த 45 ஆண்­டு­களா­க கடை நடத்­தி­வ­ரும் 61 வயது திரு முஸ்­தஃபா ‌‌‌ஷாஹுல் ஹமீது.

வாடகை சலுகை ஓர­ளவு கைகொ­டுக்­கும் என்­றா­லும் அவருக்கு அதை­விட மனி­த­வள செலவே அதி­க­மாக உள்­ளது.

“வெளி­நாட்டு ஊழி­யர் தீர்­வையை அர­சாங்­கம் குறைத்­தால் வர்த்­த­கர்­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கும்,” என்­றார் தேக்கா நிலைய வர்த்­த­கர் சங்­கத்­தின் துணைத்­ த­லை­வ­ரான அவர். இரண்­டாம் தளத்­தில் உள்ள கடை­கள் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­க­ளுக்கு அரை மாத வாட­கைத் தள்­ளு­படி அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார் 13 ஆண்­டு­க­ளாக அங்கு தொழில் புரிந்­து­வரும் திரு மட்­டல் சௌத்ரி.

மூன்று கடை­களை நடத்­தி­வ­ரும் அவர் வாட­கைக் குறைக்­கப்­பட்­ட­தில் மகிழ்ச்சி கொண்­டா­லும் பொருட்­களை எப்­படி விற்­பது என்ற கவ­லை­யில் மூழ்­கி­யி­ருக்­கி­றார்.

லிட்­டில் இந்­தியா ஆர்­கேட் கடைத்­தொ­கு­தி­யி­லுள்ள கடைக்­கா­ரர்­க­ளுக்கு பிப்­ர­வரி, மார்ச் ஆகிய இரு மாதங்­க­ளுக்கு அரை மாத வாடகை தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், கடை­வீ­டு­களில் தொழில் நடத்தும் பல­ரும் வாட­கைக்குத்தான் அக்கடைகளை எடுத்து இயங்கி வரு­கின்­ற­னர்.

தனி­ந­பர்­க­ளின் உரி­மை­யாக இருக்­கும் கடை­வீ­டு­க­ளின் வாடகை குறைக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரிய வில்லை என்று சிலர் கவலை தெரி­வித்­த­னர்.

சொத்து உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டுள்ள 15% சொத்து வரிச் சலு­கை­யைக் கொண்டு சொத்து உரி­மை­யா­ளர்­கள் வாட­கை­தா­ரர்­க­ளுக்கு வாட­கை­யில் சலுகை வழங்­க­லாம் என்று தெரி­வித்­துள்­ளார் வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங்.

ஆனால், 15% சொத்து வரிச் சலுகை என்­பது வாட­கை­யைக் குறைக்­கும் அள­விற்­குக் குறிப்­பிடத்­தக்­க­தல்ல என்­றார் லி‌‌‌ஷா எனும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமை சங்­கத்­தின் தலை­வர் திரு ராஜ்கு­மார் சந்­திரா.

“உதா­ர­ணத்­திற்கு மாதம் $10,000 வாடகை உள்ள கடைக்கு உரி­மை­யா­ளர் ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய $12,000 சொத்து வரி கட்­ட­வேண்­டும். இதில் 15% என்­பது $1,800தான். வாட­கை­தா­ரர்­க­ளுக்­கும் அது பெரிய அள­வில் சேமிப்­பாக இருக்­காது,” என்­றார் அவர்.

இன்­னும் அதி­க­மான சலு­கைகள் வழங்­கப்­பட்­டால் வாட­கைச் சலுகை வழங்க முடி­யும் என்ற அவர், கடந்த சில வாரங்­க­ளாக உத­வி­கோரி தின­மும் லி‌‌‌ஷா அலுவ­ல­கத்­திற்கு ஏரா­ள­மான வர்த்­த­கர்­கள் வரு­வ­தா­க­வும் கட்­ட­டங்­கள் தனி­ந­பர்­க­ளின் உரி­மை­யாக இருப்­ப­தால் தாங்­கள் எது­வும் செய்­ய­மு­டி­ய­வில்லை என்­றும் கூறி­னார்.

“வங்­கிக்கு மாதந்­தோ­றும் சொத்­துக் கடனை உரி­மை­யா­ளர்­கள் அடைக்­க­வேண்­டி­யுள்­ளது. வங்­கி­கள் மாதக் கடனை ஒத்­தி­வைத்­தாலோ வட்­டி­யைத் தள்­ளி­வைத்­தாலோ அல்­லது அர­சாங்­கம் முற்றி­லும் சொத்து வரியை ஓராண்­டுக்­குத் தள்­ளு­படி செய்­தாலோ உரி­மை­யா­ளர்­க­ளால் வாட­கை­யைக் குறைக்க இய­லும்,” என்றார் லிட்டில் இந்தியா­வில் பல கடை­க­ளுக்கு உரிமை­யா­ள­ரா­க­வும் இருக்­கும் திரு ராஜ்கு­மார்.

இந்­தி­யப் பய­ணத் தடை ஏற்படுத்­தி­யுள்ள சிக்­கல்­கள்

ஏப்­ரல் 15ஆம் தேதி வரை ‘ஓசிஐ’ உட்­பட வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அனைத்து விசாக்­க­ளை­யும் இந்­தியா தற்­காலி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ளது லிட்­டில் இந்­தி­யா­வின் பய­ணத்­துறை சார்ந்த வர்த்­த­கங்­க­ளை­யும் சரக்கு வரத்­தை­யும் பாதித்­துள்­ளது.

தின­சரி விமா­னம் மூலம் இந்­தி­யா­வி­லி­ருந்து பூவும் பல இந்­தி­யப் பொருட்­களும் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. தற்­போது விமா­னச் சேவை­கள் குறைக்­கப்­ப­டு­வ­தால் அந்த வர்த்­த­கங்­களில் சிக்­கல் ஏற்­ப­ட­லாம் என்று கரு­து­கின்­ற­னர் வியா­பா­ரி­கள்.

பாதிக்­கப்­படும் காய்­கறி, பூ வியா­பா­ரம்

“மலே­சியா, இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து போன்ற நாடு­க­ளி­லி­ருந்து மல்­லி­கைப் பூ இறக்­கு­மதி செய்­யப்­பட்­டா­லும் அவை உதி­ரிப் பூக்­க­ளா­கவே வரு­கின்­றன. கட்­டிய மல்­லிகை, பிச்­சிப் பூ பந்­து­கள் இந்தி­யா­வி­லி­ருந்தே வரு­கின்­றன,” என்­று சொன்னார் ஜோதி ஸ்டோர் பு‌ஷ்­பக் கடை­யின் உரி­மை­யா­ளர் திரு ராஜ்கு­மார்.

“அத்­து­டன், சீனா­வி­லி­ருந்து உல­க­மெங்­கும் பொருட்­கள் ஏற்­று­மதி ஆகும் பட்­சத்­தில் கப்­பல் போக்­கு­வ­ரத்து செலவு மிகக் குறை­வாக இருக்­கும். பொருட்­களை எளி­தில் இறக்­கு­மதி செய்­ய­லாம். ஆனால் தற்­போது அனைத்து பய­ணங்­களும் ஸ்தம்­பித்த நிலை­யில் விமா­னப் பய­ணத்தை நம்பி பொருட்­கள் இறக்­கு­மதி ஆகின்­றன. அத­னால் செலவு பல மடங்­கா­கிறது,” என்று அவர் மேலும் விளக்கினார்.

பயணி விமா­னப் போக்­கு­வ­ரத்து குறை­வ­தால், காய்­க­றி­க­ளின் விலை­களும் அதி­க­ரிக்­க­லாம் என்­றார் ‘ஆல் இந்­தியா சூப்­பர்­மார்ட்’ கடையை நடத்­தி­வ­ரும் ‘ஸ்ரீ முரு­கன் டிரே­டிங்’ நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு கே.எம்.ராம­லிங்­கம்.

“இந்­தி­யா­வி­லி­ருந்து அவ­ரைக்­காய், முருங்­கைக்­காய், வெண்­டைக்­காய் போன்ற காய்­க­றி­கள் அதன் ஆயுட்­கா­லம் கருதி, பெரும்­பா­லும் பய­ணி­கள் வரும் விமா­னங்­கள் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. விமா­னங்­கள் குறை­வ­தால், இங்கு வரும் காய்­க­றி­க­ளின் எண்­ணிக்கை குறைந்து, விலை­கள் கூடு­வ­தற்கு வாய்ப்­புண்டு,” என்­றார் அவர்.

“கப்­பல் மூலம் இந்­தி­யா­வி­லி­ருந்து ஏற்­றுமதி செய்­வ­தற்­கான பெட்­டி­கள் பெரும்­பா­லும் சீனா­வி­லி­ருந்து வரு­ம். தற்­போது சீனா­வி­லி­ருந்து இந்­தி­யா­விற்கு வரும் எந்தப் பொரு­ளும் 14 நாட்­க­ளுக்கு தனி­மைப்­ப­டு­த்தப்படுகிறது.

“அண்­மை­யில் இந்­தியா வெங்­காய ஏற்­று­ம­திக்கு தடையை நீக்கி­யி­ருந்­தா­லும் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு கப்­பல் மூலம் பொருட்­கள் வந்து சேர அதிக காலம் எடுக்­க­லாம். எப்­போது வரும், எந்த அள­விற்கு வரும் என்று சொல்ல முடி­யாது,” என்­றார் திரு ராம­லிங்­கம்.

மும்மடங்கு அதிகரித்துள்ள வெங்காய விலை

சிங்­கப்­பூ­ருக்கு இந்­தியா, சீனா, பாகிஸ்­தான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வெங்­கா­யம் இறக்­கு­ம­தி­யா­கிறது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வத் தொடங்­கி­யது முதல் சீனா­வி­லி­ருந்து வெங்­கா­யம் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தில்லை. பற்­றாக்­குறை­யால் பாகிஸ்­தா­னும் ஏற்­று­மதி செய்­வதை நிறுத்­தி­விட்­டது என்­றார் ‘சென்னை டிரே­டிங் அண்ட் சூப்பர்­மார்ட்’ நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் திரு வை. ராம­மூர்த்தி.

“$3 விற்ற மூன்று கிலோ வெங்காய பையை தற்­போது $8.50க்கு விற்­கி­றோம். சில கடை­கள் $10க்கும் மேல் விற்­கின்­றன. வெங்­கா­யம் இந்­திய சமை­ய­லில் அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் இந்த விலை உயர்வு ஒரு சவா­லாக உள்­ளது,” என்­றார் அவர்.

லாப நோக்­கத்­தை­விட இந்­தி­யர்­க­ளின் தேவை­க­ளைக் கருதி முடிந்த அள­விற்கு வெங்­கா­யத்தை குறைந்த விலை­யில் விற்­ப­தாக பல கடை­கள் தமிழ் முர­சி­டம் கூறின.

சிங்­கப்­பூ­ருக்கு கப்­பல் மூலம் வரும் வெங்­கா­யத்­தின் விலை வரும் 25ஆம் தேதி­யி­லி­ருந்து குறை­யும் என எதிர்­பார்க்­கி­றார் திரு ராம­மூர்த்தி.

லிட்­டில் இந்­தி­யா­விற்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர் எண்­ணிக்கை குறைவு, காய்­க­றி­க­ளின் விலை ஏற்­றம், உண­வ­கங்­கள், விடு­தி­களில் குறைந்த வியா­பா­ரம் போன்ற கார­ணங்­க­ளால் பொது­வா­கவே வியா­பா­ரம் கிட்­டத்­தட்ட 20 விழுக்­காடு குறைந்­துள்­ளது என்று பல வர்த்­த­கர்­கள் தமிழ் முர­சி­டம் கவலை தெரி­வித்­த­னர்.

பய­ணத்­த­டை­யால் பாதிப்­பு­றும் பயணச் சேவை

லிட்­டில் இந்­தி­யா­வின் பஃப்ளோ சாலை­யில் பேர­டைஸ் டூர்ஸ் எனும் பயண முக­வர் அலு­வ­ல­கத்தை நடத்­தி­வ­ரும் திரு சு சிரா­ஜு­தீன், பல­ரும் தங்­க­ளது இந்­தி­யப் பயணங்­களை மாற்­று­கின்­ற­னர் அல்லது ரத்து செய்­கின்­ற­னர் என்று கூறினார்.

ஷிர்டி பாபா கோவி­லுக்­குச் செல்­ல­வி­ருந்த 26 பேர் கொண்ட குழு பய­ணத் திட்­டத்­தையே மாற்­ற­வேண்­டி­யுள்­ளது. நேற்று முன்தினம் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னம் மூலம் மும்பை செல்­ல­வி­ருந்த அவர்கள் தங்­க­ளது பய­ணத்தை ஜூன் பள்ளி விடுமுறைக்கு மாற்றி­யுள்­ள­னர்.

கடந்த சில நாட்­க­ளா­கவே பல விமான நிறு­வ­னங்­கள் சேவை­களைக் குறைத்து வரும் பட்­சத்­தில் மேலும் சேவை­கள் குறைக்­கப்­ப­ட­லாம் என­வும் எதிர்­பார்க்­கப்படுகிறது.

பல விமான நிறு­வ­னங்­கள் நீக்குப்­போக்­கு­டன் செயல்­ப­டு­கின்­றன. பய­ணத் தேதியை கூடு­தல் கட்­ட­ண­மின்றி மாற்­றும் வசதி, பய­ணத்தை ரத்து செய்­வோ­ருக்கு முழுத் தொகையை மீண்­டும் பெறும் வசதி போன்­ற­வற்றை சில நிறுவனங்­கள் செயல்­ப­டுத்­து­கின்­றன. ஆனால் எல்லா விமானச் சேவை­களும் இவ்­வ­ச­தியை தர வேண்­டும் என்று திரு­மதி மீரா கூறி­னார்.

பள்ளி விடு­மு­றையை ஒட்டி இவ்­வா­ரம் இந்­தியா செல்லத் திட்­ட­மிட்­டி­ருந்த அவர் தமது பய­ணத்தை ஜூன் மாதத்­திற்கு மாற்­றி­யுள்­ளார். தேதியை மாற்­றும் வச­தி­யு­டன் கூடுதல் தொகை செலுத்தி பய­ணச்­சீட்டை வாங்கி இருந்­த­தால் தமக்கு பிரச்­சினை இல்லை என்றும் ஆனால் தமது சகோ­த­ரர் தேதியை மாற்ற கூடு­தல் கட்­ட­ணம் செலுத்தினார் என்­றும் அவர் கூறி­னார்.

தவிர்க்க முடியாத கார­ணங்­க­ளுக்காக இந்­தியா செல்ல விழை­வோர் சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்­திய தூத­ர­கத்­தில் தேவை­யான ஆத­ரவு ஆவ­ணங்­க­ளு­டன் விசா­விற்கு பதிவு செய்­ய­லாம். மேல் விவ­ரங்­க­ளுக்கு மின்­னஞ்­சல்:

visa.singapore@mea.gov.in

cons.singapore@mea.gov.in

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!