தடை இருந்தும் தாராள புழக்கம்

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புகையிலைப் பொருட்களும் மதுபானங்களும் கடத்தி விற்பனை

எஸ்.வெங்கடேஷ்வரன்

கொவிட்-19 தொற்று தங்­கும் விடுதி­களை வெளி­யு­ல­கில் இருந்து துண்­டித்­து­விட்­ட­தால், புகை­பி­டிக்க அல்­லது மது அருந்த ஏங்­கித் தவித்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதை தீர்த்துக்கொள்ள நாடக் கூடாத வழி­களை நாடி­னர்.

ஒரு விடு­தி­யில், சிக­ரெட்­டும் மது­வும் வேலிக்கு வெளி­யிலிருந்து தூக்கி வீசப்­பட்­டன. குறைந்­தது இரண்டு விடு­தி­களில் குப்பை சேக­ரிப்­போர், துப்­பு­ர­வா­ளர்­கள், ஓட்­டு­நர்­கள் உள்­ளிட்­டோர் வழி­யாக அவை கடத்­தப்­பட்­டன.

அப்­ப­டிக் கடத்தி வரப்­பட்ட சிக­ரெட்­டு­களும் மது­பா­னங்­களும் கூடு­தல் விலை வைத்து, அதி­லும் சில பொருட்­கள் நான்கு மடங்கு விலை வைத்து விற்­கப்­பட்­ட­தா­கப் பெயர்­கூற விரும்­பாத ஊழி­யர்­கள் சிலர் தமிழ் முரசு, ‘தி நியூ பேப்­பர்’ நாளி­தழ்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.

சுங்கை தெங்கா விடு­தி­யில், அங்கு வந்து செல்­லக்­கூ­டி­ய­வர்­கள் யார் என்­பதை அவர்­கள் குறித்­துக்­கொண்­ட­னர். கடந்த ஏப்­ரல் மாதத்­தில் இருந்து அவ்­வி­டு­தி­யில் மது­பா­னத்­திற்­குத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தேவா, 30, என்ற ஊழி­யர் சொன்­னார்.

ஆனா­லும், மது­பா­னம், தீர்வை செலுத்­தப்­பட்ட மற்­றும் கள்ள சிக­ரெட்­டு­கள், சட்­ட­வி­ரோ­த­மான புகை­யிலை ஆகி­யவை அங்கு கடத்தி வரப்­பட்­டன.

அத்­த­கைய சட்­ட­வி­ரோ­தப் பொருட்­க­ளைக் குப்பை சேக­ரிப்­போர் கொண்டு வந்து, துப்­பு­ர­வாளர்­க­ளி­டம் கைமாற்றி விடு­வர் என்­றும் பின் அவர்­கள் குறிப்­பிட்ட சில ஊழி­யர்­க­ளி­டம் கொடுத்து விடு­வர் என்­றும் திரு தேவா விவ­ரித்­தார். விடு­தி­யில் உள்ள மற்ற ஊழி­யர்­கள் அந்­தக் குறிப்­பிட்ட சில ஊழி­யர்­க­ளி­டம் சென்று அவற்­றைப் பெற்­றுக்­கொள்­வர்.

“எது வேண்­டு­மா­னா­லும் இங்கு கிடைக்­கும். எனது புளோக்­கில் உள்ள ஓர் அறை­யில் தங்கி இருக்­கும் ஆட­வர் ஒரு­வர் துப்­பு­ர­வா­ளர்­களி­டம் இருந்து பொருட்­க­ளைப் பெறுகிறார்,” என்­றார் திரு தேவா.

“மது­பா­னம் கேட்­போர் காலி பிளாஸ்­டிக் போத்­தல் ஒன்றை அவ­ரி­டம் கொடுத்து விட வேண்­டும். அவர் அந்த போத்­த­லில் மது­பானத்தை நிரப்­பித் தரு­வார். விடு­தி­யின் நிர்­வா­கப் பணி­யா­ளர்­க­ளுக்­குச் சந்­தே­கம் வரா­மல் இருப்­ப­தற்­கா­கத்­தான் இப்­படி ஓர் ஏற்­பாடு,” என்று அவர் விளக்­கி­னார்.

திரு கோபால் என்று தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்ட 40களில் உள்ள ஓர் ஆட­வர், சட்­ட­வி­ரோ­தப் பொருட்­கள் எதை­யும் தாம் வாங்­கி­ய­தில்லை என்­றும் ஆனால் அவற்­றின் விலை எல்­லா­ருக்­கும் தெரி­யும் என்­றும் சொன்­னார்.

நான்கு மடங்கு விலை

ஒரு சிக­ரெட் பெட்டி 40 வெள்ளி வரைக்­கும் 375 மி.லி. விஸ்கி 28 வெள்­ளிக்­கும் சட்­ட­வி­ரோத மெல்­லும் புகை­யிலை 25 வெள்­ளிக்­கும் விற்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

வெளி­யில் ஒரு பெட்டி சிக­ரெட் $10 முதல் $15 வரைக்­கும் மெல்­லும் புகை­யிலை $2.50 முதல் $5 வரைக்­கும் விற்­கப்­ப­டு­கின்­றன.

விடு­தி­களில் சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, ஊழி­யர்­கள் சிலர் வெளி­யில் வேலைக்­குச் சென்று வர முடிந்­தது. அப்­போது அவர்­களில் சிலர் உண­வுப் பொட்­ட­லத்­திற்­குள் மதுப்­புட்­டி­களை மறைத்து வைத்து கொண்டு வர முயன்­ற­னர். ஆனால் அவர்­கள் மாட்­டிக்­கொண்­ட­னர்.

பொங்­கோ­லில் உள்ள எஸ்11 விடு­தி­யில் உணவு விநி­யோக ஓட்டு­நர்­கள் மது­பா­னங்­க­ளை­யும் சிக­ரெட்­டு­க­ளை­யும் கள்­ளத்­த­ன­மா­கக் கொண்டு வந்து கொடுத்­த­னர்.

கிட்­டத்­தட்ட எட்டு ஊழி­யர்­களைக் கொண்ட குழு இந்த நட­வடிக்­கை­களை ஒருங்­கி­ணைத்­த­தா­க­வும் உண­வுப் பொட்­ட­லங்­களுக்­குள் அவை மறைத்து வைத்­துக் கொண்டு வந்­த­தா­க­வும் பெயர் வெளி­யிட விரும்­பாத ஊழி­யர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

குற்­ற­வா­ளி­கள் பிடி­பட்­டதை அடுத்து மே மாத­வாக்­கில் இத்­த­கைய கள்­ளத்­த­னங்­கள் முடி­வுக்கு வந்­தன.

வெள்ளிக்கு வெள்ளி தரகு

வெஸ்ட்­லைட் தோ குவான் விடுதி­களில் கடத்­தல் நட­வ­டிக்­கை­கள் அவ்­வப்­போது அரங்­கே­றின.

வெளி­யில் இருப்­ப­வர்­கள் பொருட்­களை வாங்கி, விடு­திக்­குள் ஆள­ர­வ­மற்ற மறை­வான பகுதி­களில் அவற்றை வீசி­விட்­டுச் செல்­லும் வகை­யில் ஊழி­யர்­கள் ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர் என்று திரு முத்து என்ற ஊழி­யர் சொன்­னார்.

“பொருட்­க­ளின் விலைக்கு நிக­ரான தர­குப் பணத்தை அவர்­கள் எடுத்­துக்­கொண்­ட­னர். பத்து வெள்­ளிக்குப் பொருள் வாங்­கி­னால், அவர்­க­ளுக்­குப் பத்து வெள்ளி கொடுக்க வேண்­டும். இச்­செ­ய­லில் இருக்­கும் அபா­யத்­திற்­கா­க­வும் அவர்­க­ளின் செல­விற்­கா­க­வும் தரகுப்பணம் கொடுக்­கப்­பட்­டது,” என்­றார் அவர்.

நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போ­து­தான் வேலிக்கு வெளியே இருந்து மது­பா­ன­மும் சிக­ரெட்­டும் வீசப்­பட்ட சம்­ப­வங்­கள் பெரும்­பா­லும் இடம்­பெற்­றன என்று வெஸ்ட்­லைட் தோ குவான் விடு­தி­யை­யும் மேலும் நான்கு விடு­தி­க­ளை­யும் நடத்தி வரும் செஞ்­சு­ரி­யன் குழு­மத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

கடந்த மே மாதத்­தில் இருந்து அத்­த­கைய ஒன்­பது சம்­ப­வங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன என்­றும் அப்­போது சிறிய அள­வி­லேயே பொருட்­கள் கடத்­தப்­பட்­டன என்­றும் அவர் கூறி­னார். அதே நேரத்­தில், பர­வலாக விநி­யோ­கிக்­கும் நோக்­கத்­தில் அவை கொண்டு வரப்­பட்­டன என்­ப­தற்கு எந்­தச் சான்­றும் இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

அவை விடு­தி­யின் விதியை மீறிய நட­வ­டிக்­கை­கள் என்­றா­லும் சிங்­கப்­பூர் சட்­டத்தை மீறி இடம்­பெ­ற­வில்லை என்­றும் அவர் சுட்­டி­னார்.

“சிங்­கப்­பூர் சுங்­கத் ­து­றை­யு­ட­னும் போலி­சு­டனும் அணுக்­க­மாக இணைந்து செயல்­பட்டு வரு­கிறோம். கடந்த ஒன்­பது ஆண்­டு­களாக நாங்­கள் சிங்­கப்­பூ­ரில் விடுதி­களை நடத்தி வரும் நிலை­யில், எங்­க­ளது விடு­தி­க­ளுக்­குள் சட்­ட­வி­ரோ­தப் பொருட்­கள் கடத்­தப்­பட்­ட­தா­கவோ விற்­பனை செய்­யப்­பட்­ட­தா­கவோ எந்­தச் சம்­ப­வ­மும் இடம்­பெ­ற­வில்லை,” என அந்­தப் பேச்­சா­ளர் கூறி­னார்.

கூடுதல் தகவல்:

கோக் யூஃபெங், டேவிட் சன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!