கட்டிப்போடும் கட்டுப்பாடுகள்; எட்டி நிற்கும் எதிர்பார்ப்புகள்

ஓராண்டு காலத்துக்கு மேலாக, உற்சாகமான ஒன்றுகூடல்களை யும் கொண்டாட்டங்களையும் தடுத்துவிட்டது கொவிட்-19 சூழல். நிலைமை சரியாகிவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் சமூகத்தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கூடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய விதி­முறை­களின்­படி, நிகழ்ச்­சிக்கு முன்னதாக பரி­சோ­தனை செய்ய ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தால் திரு­ம­ணத்­திற்கு 100 பேர் வரை அழைக்­க­லாம். இல்லையெனில் 50 பேரை மட்­டுமே அழைக்க முடி­யும்.

எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்

என் திரு­ம­ணம் நெருங்­கு­கிறது. ஜூன் மாதம் 13ஆம் தேதி என சென்ற ஆண்டே தேதி குறித்துவிட்டோம். திரு­மண மண்­ட­பம், உணவு, ஆடை, ஆப­ர­ணம், புகைப்­ப­டம், காணொளி, திரு­மண அழைப்­பி­தழ்­கள் அச்­சி­டு­வது என்று எல்லா ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­து­விட்­டோம்.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் சமூ­கத்­தில் கிரு­மித்­தொற்று வெகு­வா­கக் குறைந்­த­தால் வேலை­யி­டத்­திற்­குத் திரும்­ப­லாம், எட்டு பேர் வரை கூட­லாம் என விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டன. மன­தில் நம்­பிக்கை பிறந்­தது. நல்ல வேளை­யாக திரு­ம­ணத்தை ஜூன் மாதம் வைத்­தோம் என்று மகிழ்ந்­தேன்.

விரை­வில் சூழ்­நிலை சீராகி மீண்­டும் சமூக நட­வ­டிக்­கை­கள் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும் என்று நம்­பி­னேன்.

உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் என்று மன­திற்கு நெருங்­கி­ய­வர்­கள் உட்­பட என் வளர்ச்­சிக்கு கார­ண­மான அனை­வ­ரும் என்னை வந்து வாழ்த்தி செல்­வார்­கள் என்று எதிர்­பார்த்­தி­ருந்­தேன்.

ஆனால் மீண்­டும் சமூ­கத்­தில் தொற்­றுப் பர­வத் தொடங்­கி­யது. மோச­மாகி வரும் கொவிட்-19 சூழ­லைக் கருதி, சென்ற வாரம் புதிய கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

புதிய நடை­மு­றைக்கு ஏற்ப 50 பேரை மட்­டுமே அழைக்க எண்­ணி­யுள்­ளேன். அழைக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்த பல­ரை­யும் கூப்­பிட முடி­யாது. திரு­ம­ணத்தை நேர­லை­யில் ஒளி­ப­ரப்­பு­வ­து­தான் அதி­க­பட்ச சாத்­தி­யம் என்­ப­தால் ஒவ்­வொ­ரு­வ­ராக அழைத்­துச் சொல்லி வரு­கி­றேன்.

எனக்­கா­வது கிட்­டத்­தட்ட ஒரு மாத கால அவ­கா­சம் இருக்­கிறது. சில­ருக்கு அந்த அதிர்­‌ஷ்­ட­மும் இல்லை.

மே 16ஆம் தேதி திரு­ம­ணம் செய்த 32 வயது திரு ரகு­ராஜ் நாயுடு, 29 வயது திரு­மதி த.ஷாலினி தம்­ப­திக்கு ஒரே நாளில் திரு­மண ஏற்­பா­டு­களை மாற்ற வேண்­டி­ய­நிலை. ஸ்ரீ ருத்ர காளி­யம்­மன் ஆல­யத்­தில் திரு­ம­ணத்தை நடத்­திய இவர்­கள் பல சிக்­கல்­களை எதிர்­கொண்­ட­னர்.

“100 பேரி­லி­ருந்து 50 பேராக விருந்­தி­னர் பட்­டி­ய­லைக் குறைக்க 24 மணி நேர அவ­கா­சமே இருந்­தது. அழைத்­த­வர்­களை வர­வேண்­டாம் என்று சொல்ல மிக­வும் சங்­க­ட­மாக இருந்­தது. யாரைக் கூப்­பி­டு­வது யாரை விடு­வது எனப் புரி­யா­மல் குழம்பி­விட்டோம். இத­னால் உற­வி­னர்­க­ளி­டையே சர்ச்­சை­யும் ஏற்­பட்­டது,” என்று வேத­னைப்பட்­டார் நிதித் துறையில் பணி­புரியும் திரு ரகு­ராஜ். சனிக்­கிழமை, மே 15ஆம் தேதி மாலை தாலி படை­யல்.

அன்று காலை­யி­லி­ருந்து கோயில் நிர்­வா­கம், இந்து அறக்­கட்­டளை வாரி­யம் என்று பல அமைப்­பு­க­ளிடம் விதி­மு­றை­க­ளைத் தெளி­வு­ப­டுத்­திக்­கொள்­ளவே நேரம் சரி­யாக இருந்­தது. பின்­னர் குடும்­பத்­தி­னர் பல­ரை­யும் அழைத்து ஏற்­பா­டு­களை மாற்ற வேண்­டி­யி­ருந்­தது.

ஆல­யம் 100 பேர் வரை­யில் அனு­மதித்­தா­லும் நிகழ்­வுக்­கான கிருமி பரி­சோ­தனை சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள், ஏற்­பா­டு­க­ளைச் செய்ய குறைந்­த­பட்­சம் ஒரு வாரம் தேவை.

“மிக நெருக்­கத்­தில் இருந்­த­தால் தேதி­யைத் தள்ளி வைப்­ப­தும் சாத்­தி­ய­மா­காது. திரு­ம­ணத்­தில் ஏதா­வது சிக்­கலா என்று பேச்சு வரும். கட­வுள் மீது பாரத்­தைப் போட்­டு­விட்டு கல்­யா­ணத்தை நடத்­தி­னோம்,” என்­றார் ரகு­ராஜ்.

சிரம காலத்­தில் பல தரப்­பு­களும் உத­வு­கின்­றன. ஸ்ரீ ருத்­ர­கா­ளி­யம்­மன் ஆல­யம், மண்­ட­பக் கட்­ட­ணத்­தில் $1,000ஐ குறைத்­துள்­ளது. எனி­னும், கடை­சி­நே­ரத்­தில் பல­வற்­றை­யும் மாற்­றி­ய­மைக்க முடி­யா­மல் மிக­வும் தவித்­து­விட்­ட­னர் ரகு­ராஜ் தம்­ப­தி­யி­னர்.

ஓர் ஆண்டு தள்ளி வைத்­தும் ஏமாற்­றம்

கடந்த ஆண்டு ஜூனில் மக­ளின் திரு­ம­ணத்தை நடத்த இருந்த 51 வயது திரு ப‌ஷீர் அஹ­மது, கிரு­மித்­தொற்று குறை­யும் என்ற நம்­பிக்­கை­யில் இவ்­வாண்டு ஜூன் மாதத்­திற்கு திரு­ம­ணத்­தைத் தள்ளி வைத்­தார்.

“வழக்­க­மாக திரு­ம­ணம் என்­றால் எப்­ப­டி­யும் ஆயி­ரம் பேரா­வது வரு­வார்­கள். கொரோனா சூழ­லில் முக்­கி­ய­மான250 பேரை­யா­வது அழைக்­க­லாம் என எண்ணி இருந்­தோம்,” என்று கவ­லை­யு­டன் தெரி­வித்­தார் திரு ப‌ஷீர்.

ஃபுட்சிங் மண்­ட­பத்­தில் திரு­ம­ணத்தை நடத்த திட்­ட­மிட்­டி­ருந்த ப‌ஷீர் குடும்­பத்­தி­னர், புதிய கட்­டுப்­பா­டு­க­ளால் நிகழ்வை ‘டேஸ்ட் ஆஃப் இந்­தியா’ மண்­ட­பத்­திற்கு மாற்­றி­விட்­ட­னர். திரு­ம­ணத்தை தள்ளி வைக்­கும் எண்­ணம் அவ­ருக்கு இல்லை. கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யா­னா­லும் குறித்த நாளில் திரு­ம­ணத்தை நடத்த அவர் முடி­வு­செய்­துள்­ளார்.

“திரு­ம­ணம் வாழ்­வில் ஒரு­முறை நடப்­பது. எத்­தனை பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும், அந்த ஒரு­நா­ளில் அனை­வ­ரும் முக­ம­லர்ச்­சி­யு­டன் காணப்­ப­டு­வார்­கள். விருந்­தி­னர்­கள் கூடி தம்­ப­தி­யி­னரை வாழ்த்­து­வார்­கள். அனை­வ­ரும் ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கும் ஒரு நிகழ்வு எல்­லா­ரை­யும் சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது,” என்­றார் ப‌ஷீர்.

எனி­னும், நிலைமை மாற­லாம், பல­ரது வாழ்த்­து­க­ளோடு மண­நாள் காண­லாம் என்ற நம்­பிக்­கை­யோடு சிலர் திரு­ம­ணத்­தைத் தள்ளி வைத்­துள்­ள­னர்.

ஜூன் மாதம் திரு­ம­ணம் செய்­ய­விருந்த 27 வயது ரூபன் கங்­கேஸ், 27 வயது மிரோ­‌ஷினி கண்­ண­தா­சன் தம்­பதி திரு­ம­ணத்தை இவ்­வாண்டு டிசம்­பர் மாதத்­திற்கு தள்ளி வைத்­துள்­ள­னர்.

“புது வீடு ஜூலையில் கிடைக்க உள்ளது. புதுப்­பிப்பு பணி­கள் உள்­ளன. இதில் கொவிட்-19 சூழ­லில் திரு­ம­ண ஏற்­பாட்­டைச் செய்­வது அதிக மன­ஊளைச்­சல் தரும். எனவே திரு­ம­ணத்­தைத் தள்ளி வைக்க முடி­வெ­டுத்­தோம்,” என்­றார் அறி­வி­யல் ஆய்­வா­ள­ராக பணி­யாற்­றும் திரு ரூபன்.

திரு­ம­ணம் செய்­வோ­ர் மட்­டு­மின்றி, திரு­மண சேவை வழங்­கு­வோ­ரும் இந்­தச் சூழ­லால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

வழக்­க­மாக ஆறு முழுநேர ஊழி­யர்­கள், கிட்­டத்­தட்ட 40 பகுதிநேர ஊழி­யர்­க­ளு­டன் இயங்­கும் ‘சில்­வர்ஸ்­டார் டெக்­கோர்’ நிறு­வ­னம் தற்­போது மூன்று முழு நேர ஊழி­யர்­கள், ஐந்து பகுதி நேர ஊழி­யர்­க­ளு­டன் செயல்­ப­டு­கிறது.

கடந்த 16 ஆண்டு கால­மாக திரு­மண அலங்­கார சேவை வழங்­கும் சில்­வர்ஸ்­டார் நிறு­வ­னம் எதிர்­கொண்­டி­ருக்­கும் ஆக மோச­மான பொரு­ளி­யல் சூழ்­நிலை இது என்­றார் இதன் நிறு­வ­னர் திரு பிர­கா‌ஷ் திவா­க­ரன், 35.

வழக்­க­மாக ஒரு வாரத்­திற்கு 15 திரு­ம­ணங்­கள் வரை சேவை வழங்­கும் இந்­நி­று­வ­னம் தற்­போது வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக மூன்று திரு­ம­ணங்­க­ளுக்கே சேவை வழங்­கு­கிறது.

“புதுக் கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­ப­ட­துமே நான்கு திரு­ம­ணங்­கள் தள்ளி வைக்­கப்­பட்­டன,” என்­றார் திரு­மண புகைப்­பட சேவை­கள் வழங்­கும் ‘பிக்­பீட்ஸ் ஃபோட்டோ­கி­ராஃபி’ நிறு­வ­னத்தை நடத்­தும் செல்வி ஜெ.அனிதா, 39.

“ஆடி மாதம் தவிர்த்து மற்ற எல்லா மாதங்­க­ளி­லும் வேலை இருக்­கும். ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­களில் ஏறக்­கு­றைய 30 திரு­ம­ணங்­க­ளுக்கு சேவை வழங்­கு­வோம். இந்த ஆண்டு ஐந்து திரு­ம­ணங்­க­ளுக்­குத்­தான் சேவை வழங்­கி­னோம்,” என்­றார் அனிதா.

கொவிட்-19 பர­வத் தொடங்­கி­யது முதல் தங்­க­ளது சேவைக்­கான தேவை 70% குறைந்­துள்­ள­தாக வருத்­தப்­பட்­டார் ‘ஜெமினி கிரா­ஃபிக்ஸ் & பிரிண்­டர்ஸ்’ நிறு­வ­னத்தை நடத்­தும் 63 வயது திரு­மதி காந்தி தேவி. “திரு­மண அழைப்­பி­தழ்­களை அச்­சி­டு­வது எங்களது முக்­கிய சேவை. ஆயி­ரம் பேருக்கு பத்­தி­ரிகை அடிப்­போம். இப்­போது 50, 100 பேருக்கு அடிக்­கி­றோம்,” என்­றார் காந்தி.

என்­றா­லும் அலை ஓயும் வரை­யில் கட­லில் குளிக்க காத்­தி­ருக்க முடி­யுமா.வீடு வாங்­கு­வது, குடும்­பத்தை அமைப்­பது என்று வாழ்­வின் அடுத்த கட்­டத்­திற்­குப் போக விரும்­பு­வோர் எவ்­வ­ளவு நாள்­தான் காத்­தி­ருக்க முடி­யும். செல­வு­க­ளைக் குறைப்­ப­தற்கு இதை வாய்ப்­பா­கக் கொள்­ள­லாம் என்றார் திரு­மதி காந்தி.

செலவு குறைந்தாலும், வாழ்வில் ஒருநாள் வரும் மணநாளை உற்றார், உறவினர், நண்பர்கள் சூழ மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.

நேரில் பெறும் வாழ்த்தைப்போல் இருக்காது என்றாலும் நேரலையில் ஆசி பெற்று நல்வாழ்வைத் தொடங்குவதே இன்றைய சூழலில் செய்யக்கூடியதாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!