தூக்கி வளர்த்தவர் இறந்தார்; காதலித்தவர் பிரிந்தார்

திரு குணா­நிதி மாரி­முத்­து­வின் அப்பா சிங்­கப்­பூர் வந்து வேலை பார்த்­த­போது, அவ­ரின் தாத்தா தான் அவ­ரைக் கையில் தூக்­கிக் கொஞ்சி விளை­யா­டி­ய­தாக அந்த 24 வயது இளை­யர் கூறி­னார். பள்­ளிப் பாடங்­கள் முதல் வாழ்க்­கைப் பாடங்­கள் வரை அப்­பா­வை­விட அதி­க­மாக தாத்தா தான் சொல்­லிக் கொடுத்­தார். ஆனால், 82 வய­தில் திரு கோவிந்­த­ராஜ் குப்­பு­சாமி இறந்­த­போது, அவ­ரைச் சென்று பார்க்க முடி­யாத நிலைக்கு குணா ஆளா­னார்.

“முத­லா­ளி­க­ளி­டம் ஆலோ­சனை கேட்­ட­போது இந்­தியா சென்­று­விட்­டால் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்பி வரு­வது கடி­னம் என்­ற­னர். இரண்டு லட்ச ரூபாய் கட­னும் கட்ட வேண்­டி­யுள்­ளது. அதை அடைக்­க­வில்லை என்­றால் சிங்­கப்­பூ­ருக்கு வேலை பார்க்க வந்­த­தற்கு அர்த்­தமே இல்­லா­மல் போய்­வி­டும். சிங்­கப்­பூ­ரி­லேயே இருக்க முடி­வெ­டுத்­தேன்,” என்­றார் நான்கு ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் நிலச் சீர­மைப்­புத் துறை­யில் வேலை பார்க்­கும் குணா. அவர் தம் தாத்­தாவை மட்­டும் இழக்­க­வில்லை. ஐந்­தாண்­டு­க­ளாக காத­லித்த பெண், வேறு ஒரு­வரை இவ்­வாண்டு தொடக்­கத்­தில் மணந்து­கொண்­டார்.

“சாதி கார­ணத்­தால் அவ­ரின் குடும்­பத்­தார் அவரை வேறு ஒரு­வருக்­குத் திரு­ம­ணம் செய்­து­வைத்­த­னர். ஊருக்­குத் திரும்ப முடிந்­தி­ருந்­தால் நிச்­ச­ய­மா­கப் பேச்சு நடத்தி திரு­ம­ணம் செய்­தி­ருக்­கலாம்,” என்­றார் குணா.

கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக திரு குணா­வைப்­போல பல வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளால் சொந்த ஊருக்­குத் திரும்ப முடி­யாத கார­ணத்­தால் பல­வற்றை இழக்­கும் சூழல் அவர்­க­ளுக்கு நேர்ந்­துள்­ளது. முன்பு ஓய்வு நாளில் தேக்­கா­விற்­குப் போய் சாப்­பி­டு­வது, கோயி­லில் வழி­ப­டு­வது, நண்­பர்­களு­டன் பேசிப் பழ­கு­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் மன­திற்கு மகிழ்ச்சி தந்­தன. இப்­போது அது­வும் இல்லை என்று வருத்­தப்­பட்­டார் கட்­டு­மா­னத் துறை ஊழி­யர் திரு அழ­கர் வீர­முத்து, 34.

“ஊழி­யர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோம். அவ்­வப்­போது வெளியே சென்று வர அனு­ம­தித்­தால், எங்­க­ளின் மன­திற்கு ஆறு­த­லாக இருக்­கும்,” என்­றார் அவர். தீபா­வளி, பொங்­கல், ஊர்த் திரு­விழா போன்ற பண்­டி­கைக் காலங்­களில் ஊர் திரும்­பு­வது அல்­லது தேக்­கா­விற்­குப் போய் கொண்­டா­டு­வது கட்­டு­மா­னத் துறை ஊழி­யர் 34 வயது திரு பிரம்­ம­தே­வன் செல்­லை­யா­விற்கு வழக்­கம்.

“வேலை, தங்­கு­மி­டம் இல்­லா­விட்­டால் பொழு­து­போக்கு மையத்­திற்­குப் போக­லாம் என்று சொல்­கி­றார்­கள். ஆனால் ஊழி­யர்­களை வெளியே அனுப்ப முத­லா­ளி­கள் பயப்­ப­டு­கி­றார்­கள். தேக்­கா­விற்­குப் போக­லாம் என்று அர­சாங்­கம் அனு­ம­தித்­தா­லும் முத­லா­ளி­கள் தைரி­ய­மாக ஊழி­யர்­க­ளைச் சமூ­கத்­திற்கு அனுப்­பு­வார்­களா என்­பது சந்­தே­கம்­தான்,” என்­றார் பிரம்மா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!