தங்குவிடுதிவாசிகள் சமூ­கத்­தில் கலந்­து­ற­வாட புதிய முன்னோடித் திட்டம்

விடு­தி­களில் தங்கி உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களைச் சமூ­கத்­தில் கலந்­து­ற­வாட அனு­ம­திக்­கும் ஒரு முன்­னோ­டித் திட்­டம் வரும் வாரத்­தில் தொடங்­கு­கிறது.

தொடக்­க­மாக விடு­தி­க­ளைச் சேர்ந்த, முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 500 ஊழி­யர்­கள் வரை சமூ­கத்­தில் குறிப்­பிட்ட சில இடங்­க­ளுக்­குச் சென்று வர, வாரம் ஆறு மணி நேரம் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஊழி­யர்­கள் தங்­கி­யுள்ள விடுதி­களில் முந்­தைய இரண்டு வார காலத்­தில் கொவிட்-19 தொற்று இருந்­தி­ருக்­கக்­கூடாது. அத்­து­டன் விடு­தி­களில் தங்கி இருக்­கும் ஊழி­யர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும்.

இந்த முன்­னோ­டித் திட்­டம் மூலம் ஊழி­யர்­கள் செல்­லக்­கூ­டிய முதல் இட­மாக லிட்­டில் இந்­தியா தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு செல்­வ­தற்கு முன்­ன­தாக ஊழி­யர்­கள் கொவிட்-19 விரை­வுப் பரி­சோ­தனை மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும். சென்று வந்­த மூன்று நாட்­களில் அந்­தச் சோத­னைக்கு உட்­பட வேண்­டும். ஒரு மாத காலம் இந்த முன்­னோ­டித் திட்­டத்தை மனி­த­வள அமைச்சு மதிப்­பிட்டு வரும்.

இத­னி­டையே தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் ஊழி­யர்­கள் தங்­க­ளுக்­கு­ரிய பொழுது­போக்கு இடங்­களுக்கு வாரம் இரண்டு முறை சென்று வரும் அனு­ம­தி­யும் தங்­க­ளைத் தாங்­களே பரி­சோ­தித்­துக்­கொள்­ளும் புதிய கட்­டாய சுய­பரி­சோ­தனை­களும் நாளை தொடங்­கும்.

இதன் தொடர்­பில் தம் கருத்­து­க­ளைக் கூறி­யி­ருந்­தார், கடந்­தாண்டு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண­மடைந்த வெளி­நாட்டு ஊழி­யர் 27 வயது ம.அ. ரஞ்­சித் குமார்.

"துவாஸ் டெக் பகு­தி­யில் இருந்த ஒரு தங்­கு­வி­டு­தி­யி­லி­ருந்து ஜூரோங் பகுதி இருப்­பி­டத்­திற்கு இடம் மாறி­னேன். நீண்ட இடை­வே­ளைக்­குப் பிறகு, முன்­னர் என்­னு­டன் தங்­கு­வி­டு­தி­யில் வசித்த சக நண்­பர்­களை லிட்­டில் இந்­தி­யா­வில் சந்­திக்க ஆவ­லு­டன் இருக்­கி­றேன்," என்று கட்­டு­மான ஊழி­ய­ராக வேலை பார்க்­கும் ரஞ்­சித் குமார் கூறி­னார்.

"வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மன நல­னைக் கருதி, சரி­யான பாதையை நோக்­கியே இந்த மாற்­றங்­கள் அறி­முகப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. இருப்­பி­னும், சமூ­கத்­தி­ன­ரு­டன் இணை­யும் அக்­கு­று­கிய நேரத்­தில் சுதந்­தி­ர­மாக தங்­க­ளது விருப்ப நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் வாய்ப்பு கொடுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கி­றோம்," என்று கூறி­னார் TWC2 எனும் வெளி­நாட்டு ஊழி­யர் நல அமைப்­பின் நிர்­வாகக் குழு உறுப்­பி­னர் திரு­வாட்டி கிறிஸ்­டின் பெலி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!