வாசனைத் திரவிய வர்த்தகத்துக்கு வித்திட்ட தாயின் நம்பிக்கை

வாசனைத் திர­விய எண்­ணெய் வர்த்­த­கம் செய்து வரும் 29 வயது ஷோபனா சண்­மு­க­நா­தன், 2018ஆம் ஆண்­டில் இயற்­கை­யான அத்­தி­யா­வ­சிய எண்­ணெய்­கள் பற்­றி­யும் மூலி­கை­கள் பற்­றி­யும் தெரிந்­து­கொள்ள கேர­ளா­விற்கு ஏழு மாதப் பய­ணம் மேற்­கொண்­டார்.

"பரிச்­ச­ய­மில்­லாத ஊருக்கு தனி­யாக உங்­கள் மகளை எப்­படி அனுப்பு­கி­றீர்­கள்?" என்று ஷோப­னா­வின் தாயா­ரி­டம் பலர் அப்­போது கேட்­ட­னர்.

அதற்கு ஷோப­னா­வின் தாயார், "கூட்டைவிட்டு வெளியே சென்­றால்­தான் அவ­ளால் கற்­றுக்­கொள்ள முடி­யும். தவறு செய்­தா­லும் ஏதே­னும் தவ­றாக நடந்­தா­லும் அதி­லி­ருந்து கற்­றுக்­கொள்­வாள்," என்று உறு­தி­யோடு பதி­ல­ளித்­த­தாகப் பெரு­மை­யு­டன் கூறி­னார் ஷோபனா.

ஷோப­னா­வின் வர்த்­தகப்

பய­ணத்­தில் இவ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ரும் நண்­பர்­களும் பெரும்­

பங்­காற்­றி­யுள்­ள­னர்.

தமது சகோ­த­ர­ருக்குப் புற்று நோய் ஏற்பட்ட பிறகு வழக்கமாகப் பயன்­ப­டுத்­தும் வாசனைத் திர­வி­யங்­கள், சவர்க்­கா­ரம் ஆகி­ய­வற்றை புற்­று­நோய் நோயா­ளி­கள் பயன்­

ப­டுத்த முடி­யாது என்­பதை ஷோபனா தெரிந்­து­கொண்­டார். இது அவர் வாழ்க்­கை­யில் ஒரு பெரிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­யது. ஆல்­க­ஹோல் இல்­லாத, தோலுக்குப் பாது­காப்­பான இயற்­கை­யான வாசனைத் திர­வி­யங்­கள், தோல் பரா­ம­ரிப்புப் பொருட்­கள் தயா­ரிப்­பில் இவ­ரது கவ­னம் திரும்பி­யது. மூலி­கை­க­ளுக்­குப் பேர்­போன கேர­ளா­விற்­குச் சென்று அத்­தி­யா­வ­சிய எண்­ணெய்­கள் பற்­றி­யும் மூலி­கை­கள் பற்­றி­யும் கற்­றுக்­கொண்டு மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்குத் திரும்பினார் ஷோபனா.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'ஜிவவ்ரா' என்ற பெய­ரில் தனது வாசனைத் திர­விய எண்­ணெய் மற்­றும் தோல் பரா­ம­ரிப்புப் பொருட்­கள் வர்த்­த­கத்தைத் தொடங்­கி­னார். முறைப்­படி கற்­றுக்­கொண்டு, கேர­ளா­வின் நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­சனை பெற்று, இயற்கைப் பொருட்­களைக் கொண்டு கேர­ளா­வில் இவ­ரது வாசனைத்

திர­வி­யங்களைத் தயா­ரித்­தார்.

வாசனைத் திரவியங்களைத் தயா­ரிக்கும் முறை, பொட்­டல வடி­வ­மைப்பு, முத்­திரை,

சான்­றி­தழ், விற்­பனை, விளம்­ப­ரம், நிறுவனத்தின் இணை­யப்­பக்­கம் ஆகிய அ­னைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் நடந்து வருகின்றன.

"இதுபோன்ற வாய்ப்­புகள்­

வாழ்க்­கை­யில் சில சம­யங்­களில் மட்­டுமே கிடைக்கும். அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பு. தோல்­வி­ ஏற்பட்டால் அதிலிருந்து கற்­றுக்­கொண்டு அடுத்­த­ கட்­டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்" என்று தமது தந்தை கூறிய வார்த்­தை­கள் இந்த வர்த்­த­கத்­தில் தீவிரமாக இறங்க ஊக்கம் அளித்ததாக ஷோபனா தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!