அடுத்த பிரதமரும் கொவிட் தேர்தலும்

2003 ஆகஸ்ட் 17ஆம் தேதி­யன்று தேசிய நாள் பேர­ணி­யில் உரை­யாற்­றி­ய­போது, அடுத்த பிர­த­ம­ராக திரு லீ சியன் லூங்கை அமைச்­சரவை தேர்ந்­தெ­டுப்­ப­தாக திரு கோ அறி­வித்­தார்.

2004 மே 22ஆம் தேதி இளம் அமைச்­சர்­கள் 10 பேர் ஏக­ம­னதாக திரு லீயை கட்­சி­யின் மூன்­றாம் தலை­மு­றைத் தலை­வ­ராக நியமித்­த­னர். 2004 ஆகஸ்ட் 12ல் திரு லீ, 52, பிர­த­ம­ரா­னார்.

திரு லீ பிர­த­ம­ராக தன்னை நன்கு நிலை­நி­றுத்­திக்கொண்டு தேர்த­லைச் சந்­திக்க குறைந்­த­பட்­சம் இரண்டு ஆண்­டு­கள் கால அவ­கா­சம் தேவை என்று திரு கோ தெரி­வித்­து இருந்தார்.

2006 பொதுத் தேர்­த­லில் 66.6% வாக்­கு­க­ளு­டன் திரு லீ தலை­மையில் மசெக வென்­றது. பிறகு 2011 மே 7ஆம் தேதி திரு லீ தலை­மை­யில் மசெக 60.1% வாக்­கு­க­ளைப் பெற்­றது.

பாட்­டா­ளிக் கட்சி முதல் குழுத்­தொ­கு­தி­யைக் கைப்­பற்­றி­யது.

2015 செப்­டம்­பர் 11 பொதுத் தேர்­த­லில் 69.9% வாக்­கு­க­ளு­டன் மசெக வென்­றது. 2018 நவம்­பர் 23ல் அப்­போது நிதி அமைச்­ச­ராக இருந்த ஹெங் சுவீ கியட், 57, கட்­சி­யின் முதல் உதவி தலைமைச் செய­லா­ள­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். 2019 மே மாதம் அவர் துணைப் பிர­த­ம­ரா­னார்.

2020 ஜூலை 10ஆம் தேதி நடந்த கொவிட்-19 பொதுத் தேர்­த­லில் திரு லீ தலை­மை­யில் 61.2% வாக்­கு­க­ளு­டன் மசெக வென்­றது. ஆனால் பாட்­டா­ளிக் கட்சி 10 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது.

2021 ஏப்­ரல் 8ஆம் தேதி திரு ஹெங், 60, நான்­காம் தலை­முறைத் தலை­வர் பொறுப்­பில் இருந்து வில­கிக்­கொண்­டார். மசெ­க­வின் நான்­காம் தலை­முறைத் தலை­வராக திரு லாரன்ஸ் வோங், 49, தேர்ந்து எடுக்­கப்­பட்டுள்ளதாக 2022 ஏப்­ரல் 14ஆம் தேதி திரு லீ, 70, அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!