விரயம் இல்லாத தீபாவளி விருந்து

நாளை தீபாவளி. புத்தாடை, வீட்டு அலங்காரங்களுடன் தீபாவளியில் முக்கிய இடம்பிடிப்பது விருந்து. கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்றுகூடி விருந்துண்ண முடியாததால் இந்த ஆண்டு சிறப்பாக விருந்து படைக்க, தீபாவளி கொண்டாடுபவர்கள் ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பார்கள். தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட நினைக்கும் அதே நேரத்தில், வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரயத்தைத் தவிர்ப்போம்.

ஆண்­டுக்கு ஒரு­முறை வரும் பண்­டிகை என்­ப­தால் வகை வகை­யான இனிப்­பு­கள், மொறுமொறு முறுக்­கு­வகைகள் போன்ற நொறுக்­குத்­தீ­னி­க­ளு­டன் மணக்­கும் பிரி­யாணி, கோழி மசாலா, இறைச்­சிக்கறி, இறால் சம்­பால் என்று அறு­சுவை உணவு வகை­க­ளு­டன் விருந்து படைக்க வேண்­டும் என்­பதே எல்­லா­ரு­டைய விருப்பமும்.

விருந்­துக்கு வரு­ப­வர்­களும் பல வகை உணவையும் ருசிபார்க்­கும் ஆர்­வத்­து­ட­னேயே வரு­வார்­கள். உணவு சுவை­யாக இருந்­தா­லும், பல வகை­யான உண­வு இருக்கும்­போது எல்­லா­வற்­றி­லும் சிறி­த­ளவே சுவைப்­பார்­கள். அதிலும் பல வீடு­க­ளுக்கு தீபா­வளி கொண்­டா­டச் செல்­ப­வர்­கள் என்­றால் அளவு இன்­னும் குறைந்­து­வி­டும்.

வயி­றார விருந்து படைக்க வேண்­டும் என்று அதிக உணவு வகை­களைத் தயார் செய்­வ­தும், போதா­மல் போய்­வி­டக்­கூ­டாது கூடு­த­லா­கச் சமைப்­பதும் அல்­லது வாங்­கி­ வைப்­ப­தும் இயல்­பா­னதே. ஆனால், அதிக அள­வில் உணவு மீந்­து­வி­டும்­போது அதைக் குப்­பை­யில் கொட்ட நேர்­கிறது.

SPH Brightcove Video

கொண்டாட்டம் இருந்தாலும் செலவைக் குறைக்கத் திட்டம்

பெரும்­பா­லும் தீபா­வ­ளி­யன்று உணவு அதி­க­மாக மீந்­து­விட்­டால், மறு­நாள் வைத்­தி­ருப்­பார் அல்­லது தம் அண்டை வீட்­டுக்­கா­ரர்­க­ளுக்­கும் பிள்­ளை­க­ளின் நண்­பர்­க­ளுக்­கும் கொடுத்­து­வி­டு­வார் 52 வயது தமிழ் வாணி.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக தீபா­வ­ளிக்குக் கடை­யி­லி­ருந்து உணவு தரு­விக்­கும் தமிழ் வாணி, சைவ, அசைவ உணவு வகை­களை வாங்க கிட்­ட­த்தட்ட 200 வெள்ளி செலவு செய்­வார். பணி­பு­ரி­வ­தால் சமைப்­ப­தற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை எனக் கூறும் அவர், தீபாவளி­யன்று சமைத்து களைப்­படை­வதை­விட வீட்­டுக்கு வரு­வோருக்கு விருந்து பரி­மாறி, அவர்­க­ளு­டன் உட்­கார்ந்து பேசி ஓய்­வாக இருப்­பது மகிழ்ச்­சி­யாக இருக்­கும் எனக் கரு­து­கி­றார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் இல்­லை­யென்­ப­தால் இந்த ஆண்டு அதி­க­மா­னோர் வரும் சாத்­தி­யம் இருந்­தா­லும், குறைந்த அளவு இறைச்சி, கோழி ஆகிய உணவு வகை­களை வாங்கி, உணவை விரயம் செய்­வதைத் தவிர்க்க எண்ணி­யுள்­ளார் தமிழ் வாணி. செல­வு­கள் கூடி­வ­ரும் நிலை­யில், குறைந்­தது செல­வில் 50 வெள்­ளியை மிச்­சப்­ப­டுத்த வேண்­டும் என்­பது அவ­ரின் இலக்கு.

நண்பர்களுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருந்து

ஆண்­டு­தோ­றும் நண்­பர்­க­ளு­டன் இணைந்து நிதி திரட்டி, வெளிநாட்டு ஊழி­யர்­க­ளுக்கு பிரி­யா­ணி­யும் பல­கா­ரங்­களும் அளித்து வரு­கி­றார் 61 வயது லலிதா.

குறைந்த வரு­மான குடும்­பங்­களுக்­கும் பல­கா­ரங்­களும் சமைப்­பதற்­குத் தேவை­யான பொருள்களும் வாங்­கித் தரு­கி­றார்.

“முன்­பெல்­லாம் நானும் என் நண்­பர்­களும் சமைத்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் முதி­யோர் இல்­லங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்­கும் கொடுப்­போம். ஆனால், சுகா­தா­ர­மான, பாது­காப்­பான முறை­யில் உண­வைத் தயார் செய்ய கூடு­தல் வழி­மு­றை­களை பின்­பற்ற வேண்டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது. அதனால், கடந்த ஆண்­டி­லி­ருந்து உணவை வாங்­கிக் கொடுக்­கத்தொடங்­கி­விட்டோம்,” என்­றார் லலிதா.

கிட்­டத்­தட்ட 60 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு பிரி­யாணி, பல­காரங்­களை நாளை அளிக்­க­வுள்­ளார் லலிதா. ராஜாஸ் கேட்­ட­ரிங் நிறு­வனத்­தி­லி­ருந்து அவர் உணவை வாங்­கு­கி­றார்.

நேர விர­யத்­தை­யும் பொருள்­வி­ர­யத்­தை­யும் தவிர்க்க பல­ரும் வெளி­யி­ருந்து உணவு வாங்­கப் போவதா­கவே மேலும் பல­ரும் தெரி­வித்­த­னர். ஆனால், விலை அதி­க­ரித்து விட்­ட­தால் குறைந்த அளவே வாங்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக சிலர் கூறி­னர். ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு வீட்­டில் விருந்து வைப்­ப­தால் செலவைப் பார்க்­க­வில்லை என வேறு சிலர் தெரி­வித்­த­னர்.

விரயம் தவிர்க்க கடைசி நேர

பணிப்பை தவிர்க்கும் உணவகங்கள்

உண­வகங்­கள் ஏற்­கெ­னவே முன்­ப­தி­வு­களை ஏற்­றுக்­கொண்டு விட்­ட­தால், கடைசி நேரத்­தில் பணிப்பு (ஆர்டர்) செய்­யும்­போது சிர­மம் ஏற்­ப­ட­லாம். கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­னரே தீபா­வளி உண­வு­பற்றி விசா­ரிக்க ஆரம்­பித்­து­விட்­ட­தாக ‘செம்­மிஸ் கேட்­ட­ரிங்’ நிறு­வ­னம் தெரி­வித்­தது.

முன்­கூட்­டியே எவ்­வ­ளவு தேவைப் படும் எனத் தெரிந்­தால், அதி­க­மாகச் சமைத்து வீண­டிக்கவேண்டிய தில்லை என உண­வ­கங்­கள் கூறின. அத­னால் பல உண­வ­கங்­கள் கடைசி நேர பணிப்பை ஏற்­றுக் கொள்­வ­தில்லை. எனவே வெளி­யில் உணவு வாங்க நினைப்­ப­வர்­கள் முன்­ன­தா­கவே திட்­ட­மிடுவது நல்­லது.

சரா­ச­ரி­யாக ஒரு விருந்துச் சாப்­பாட்­டுக்கு $13 முதன் $15 வரை செல­வா­கும். குறிப்­பிட்ட அளவு உணவு வாங்­கா­த­போது, கூடு­தலாக 50 வெள்ளி விநி­யோ­கத்­திற்கே செல­வா­க­லாம்.

உதா­ர­ணத்­திற்கு, அஞ்­சப்­பர் உண­வ­கம் நான்கு தீபா­வளி உணவு பட்­டி­யல்­களை வெளி­யிட்­டுள்­ளது. இதில் ‘புதுகை விருந்து’ தலைக்கு $15. கோழி லாலி­பாப், செட்­டி­நாட்­டுக் கோழி மசாலா, சோறு, ரசம், மோர், உரு­ளைக்­கி­ழங்கு வறு­வல், காலி பிள­வர் மசாலா, அப்­ப­ளம், ஊறு­காய், பால் பாய­சம் ஆகி­யவை இதில் வழங்­கப்­ப­டு­கின்­றன. குறைந்­தது 25 பேருக்­கா­வது இவ்­வு­ணவை வாங்க வேண்­டும்.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக உணவு சமைத்து உணவு விநி­யோ­கித்து வரும் செம்­மிஸ் கேட்­ட­ரிங்­கில் இந்த ஆண்டு ஒரு சாப்­பாட்­டின் விலையை $2 முதல் $3 வரை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஈராண்­டு­களில் ஏற்­பட்ட இழப்­பி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­கும் பண­வீக்­கத்­தால் மூலப்­பொ­ருள்­க­ளின் விலை ஏற்றத்தை ஈடு­செய்ய வேண்­டும் என்­ப­தா­லும் இம்­மு­டிவை எடுக்க நேரிட்­ட­தாக செம்­மிஸ் கேட்­ட­ரிங் நிறு­வ­னத்­தின் நிதி நிர்­வா­கி­யான சாய்­ச­ஜித்தா பழனி­சாமி கூறி­னார்.

இம்­முறை ஏறக்­கு­றைய 2,000 பேர் தீபா­வளிக்கு உண­வுக்­குச் சொல்­லி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

“எனது தாயார், சமை­ய­லில் பயன்­ப­டுத்­தும் மூலப்­பொ­ருள்­க­ளை­யும் உணவு சமைக்­கும் முறை­யை­யும் கடைப்பி­டித்து வரு­கி­றேன். ஒவ்­வோர் உணவு விநி­யோ­கத்­தின்­போ­தும், குடும்­பத்­தில் இருக்­கும் ஒரு­வ­ரா­வது அனைத்து உணவு வகை­க­ளை­யும் ருசித்த பின்­னர்­தான் அனுப்­பு­வோம். எங்­கள் அம்மாவின் கைம­ணத்­து­டன் எல்லா உண­ வகையும் இருக்க வேண்­டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றோம்,” என்­றார் அவர்.

கிங்ஸ் உண­வ­கத்­தின் இயக்­குநர் முகம்­மது இக்­பால், சமைப்­ப­தற்­கான மூலப்பொருட்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ள­தால் இம்­முறை தீபா­வளி விருந்து உண­வின் விலை­யும் 25 விழுக்­காடு கூடி­யுள்­ளது என்­றார்

எனி­னும், கொவிட்-19 கிரு­மித்­தொற்­று அலை குறைந்­துள்­ள­தால் கடந்த 2021ஆம் ஆண்­டை­விட இரு மடங்கு அதி­க­மாக, இந்த ஆண்டு தீபாவளி சாப்பாட்டுக்கு முன்­பதிவுகள் வந்­துள்­ளதாகத் தெரி வித்தார் அஞ்­சப்­பர் உண­வ­கத்­தின் நிர்­வாக பங்­கு­தா­ர­ரான மாணிக்­கம் கும­ரேசன்.

“விலை கூடி­னா­லும் உணவு விலையை நாங்­கள் கூட்­ட­வில்லை. கிரு­மித்­தொற்று பாதிப்­பி­லி­ருந்து மீண்டு வரும் இக்­கா­ல­கட்­டத்­தில், அதிக மக்­கள் உணவு வாங்கி எங்­கள் வணி­கத்­திற்கு லாபத்தை தரு­வதால், விலை­களை ஏற்­றா­ம­லி­ருப்­பதே எங்­க­ளுக்கு நல்ல முடி­வாக தெரி­கின்­றது,” என்­றார் அவர்.

செலவும் உழைப்பும் அதிகம்

என்றாலும் வீட்டு சமையலே சிறப்பு

இல்­லத்­த­ர­சி­யான 54 வயது உ. சரஸ்­வ­திக்கு வீட்­டில் தம்­ கையால் சமைத்து விருந்­த­ளிப்­பதே மன­நிறை­வைத் தரு­கிறது. 16-17 பேருக்கு சமைப்­ப­தற்கு, 600 வெள்ளி செலவு ஆகிறது என்­றா­லும் சுவை­யான, தர­மான விருந்­தைப் படைக்­க­முடிவதா­கக் குறிப்­பிட்ட அவர், வீட்­டுக்கு வரு­ப­வர்­கள் சுவைத்­துச் சாப்­பி­டு­வது மகிழ்ச்சி தரு­வ­தா­க­வும் சொன்­னார்.

கடை­யில் வாங்­கி­னா­லும் வீட்­டில் சமைத்­தா­லும் திட்டமிட்டு செயல்பட்டால் விர­யம் இல்லாமல் விருந்து படைத்து மகிழலாம்.

mathangielan@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!