‘கால்கள் மிதிக்க, கைகள் தட்ட காசுக்கு கவலை எனக்கில்லை’

காலம் மாறி­னா­லும் தான் மாற­வில்லை என்­கி­றார், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ‘கப்­பூர்’ கிரா­மத்­தைச் சேர்ந்த திருமதி ஜோதி என்ற 52 வயது குடும்­ப­மாது.

இப்­போ­தெல்­லாம் எரி­வா­யுவைச் சமை­ய­லுக்கு பயன்­படுத்­து­கி­றார்­கள். ஆனால் இவர் இன்­ன­மும் பெரும்­பா­லான நாள்­களில் வறட்டி, விற­கைப் பயன்­படுத்தி வீட்­டில் சமைப்பதாகக் கூறுகிறார்.

“இரண்டு வறட்டி, ஒரு விறகு இருந்­தால் போதும் ஐந்து பேருக்கு சாதம், குழம்பு, கூட்டு உள்­ளிட்ட அனைத்­தை­யும் முழு­மை­யாக சமைத்­து­வி­ட­லாம்,” என்­கி­றார் திரு­மதி ஜோதி.

இவர்­கள் வீட்­டில் இரண்டு பசு மாடு­கள் இருக்­கின்­றன.

“ஒரு மாடு ஒரு நாள் போடும் சாணத்­தைக்கொண்டு ஐந்து, ஆறு வறட்­டி­க­ளைத் தட்­டி­வி­ட­லாம். அரை மணி நேரம் செல­விட்­டால் போதும். 15 வறட்­டி­கள் உரு­வா­கி­வி­டும்,” என்று தன்­னு­டைய வீட்­டின் கொல்­லைப் புறத்­தில் வறட்டி தட்­டிக்­கொண்டு இருந்த அந்த மாது குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி ஜோதி­யின் கண­வர் ஒரு விவ­சாயி. இத்­தம்­பதிக்கு மண­மான இரு புதல்­வர்­கள் இருக்­கி­றார்­கள்.

“முன்பு எங்­கள் வீட்­டில் நான்கு, ஐந்து மாடு­கள் இருந்­தன. நிறைய சாணம் சேரும்.

“நானே வறட்­டி­களைத் தட்டி தேவை­யா­ன­வற்றை வைத்­துக்­கொண்டு மிச்சத்தை விற்­று­விடு­வேன்.

“இப்­போது ஒரு வறட்டி ரூ. 10க்குக்­கூட விலை போகிறது.

“ஆனா­லும் கிரா­மப் புறங்­களில் மாடு வைத்­தி­ருப்­போ­ரில் பெரும்­பா­லா­ன­வர்­கள் வறட்டி தட்­டு­வ­தில்லை. ஒரு வறட்டி காய மூன்று நாள் ஆகும்.

“மழைக்­கா­லம் என்­றால் 10 நாள்­கூட பிடிக்­கும். சாணத்தை வைக்­கோல் கூளங்­களில் சேர்த்து இரண்­டும் முற்­றி­லும் சேரு­மாறு காலால் முத­லில் மிதித்­துக் கொள்ள வேண்­டும்.

“பிறகு கைக­ளால் தட்டி காய­வைத்­து­விட வேண்­டும். நல்ல வெயி­லில் காயும் வறட்­டி­களை அடுத்த நாள் புரட்­டிப் போட்டு காய­வைக்க வேண்­டும்.

“முன்­பெல்­லாம் வீட்­டுச் சுவர்­களில் வறட்­டி­யைத் தட்டி காய­வைப்­பார்­கள். இப்­போது கான்­கி­ரீட் சுவ­ரில் அத­னைச் செய்ய இய­ல­வில்லை,” என்று அந்த மாது குறிப்­பிட்­டார்.

வறட்­டிக்கு அதி­கத் தேவை நில­வு­கிறது. விபூதி தயா­ரிப்­பி­லும் குத்­து­வி­ளக்­கின் நடு­வில் இருக்­கும் ஒரு வகை மண் கலந்த பொரு­ளைச் சுட்டு உரு­வாக்­கு­வ­தி­லும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

செங்­கல் கால்­வாய், உடல் தக­னம் ஆகி­ய­வற்­றுக்கு வறட்டி முக்­கி­ய­மான ஒன்று.

“வறட்டி நின்று நெடு­நே­ரம் எரி­யக்­கூ­டி­யது. புகை அவ்­வ­ள­வாக வராது,” என்­றார் அவர்.

வறட்டி அதிக வெப்­பத்தை கக்­கக்­கூ­டி­யது. அதிக சூட்­டைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளக்­கூ­டி­யது.

ஒரு மணி நேரம் வறட்டி தட்­டி­னால் உடம்பு மிக­வும் சூடா­கி­வி­டும். ஆகை­யால், வாரத்­திற்கு ஒரு முறை எண்­ணெய் நீரா­டு­வது அவ­சி­ய­மான ஒன்று.

ஒரு மண்­ட­லம் அதா­வது 48 நாள்­கள் அன்­றா­டம் நான்கு வேப்­பி­லை­யைச் சாப்­பிட்டு வந்­தால் உட­லில் எந்த அள­வுக்கு சூடு உண்­டா­குமோ அந்த அள­வுக்கு வறட்டி தட்­டும்­போது உடல் வெப்­பம் கூடும் என்று கூறப்­ப­டு­வது உண்டு.

“முன்­பெல்­லாம் அதிக நேரம் வறட்டி தட்­டு­வேன். இப்­போது உடல்­நிலை கார­ண­மாக இதைக் குறைத்­துக்­கொண்­டேன்.

“வீட்­டில் சமை­ய­லுக்கு வறட்டி, விற­கைப் பயன்­ப­டுத்­து­வது உடல்­ந­ல­னுக்கு மிக­வும் ஏற்­றது. சுற்­றுச் சூழ­லுக்­கும் மிக­வும் உகந்­தது,” என்று கூறும் இந்த மாது, வறட்டி, விறகை சமை­ய­லுக்­குச் சார்ந்­தி­ருப்­ப­தன் மூலம்­ சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உத­வு­வ­தா­கக் கரு­து­கி­றார்.

“பொது­வாக வறட்டி 1.25 அடி விட்­டம் அள­வுள்ள வட்ட வடி­வில் இருக்­கும். வறட்­டி­யைத் தட்டி அதை விற்றே குடும்­பத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய சில்­லறை செல­வு­களை எல்­லாம் சமா­ளித்­து­வி­ட­லாம்.

“வறட்டி பல நேரங்­களில் எனக்­குக் கைகொ­டுத்து இருக்­கிறது. வறட்­டியை விற்று பொருள் ஈட்டி அதி­லி­ருந்து கைப்­பே­சி­கூட வாங்கி இருக்­கி­றேன்,” என்று திரு­மதி ஜோதி கூறி­னார்.

“மாட்­டுச் சாணத்­தில் இருந்து திரு­நீ­றும் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. ஆனால், இதை நாங்­கள் செய்­வ­தில்லை.

“வைக்­கோல் கூளம் கலக்­கா­மல் சாணத்­தைச் சுத்­தம் செய்து அதை முட்­டம் போட்டு திரு­நீறு தயா­ரிக்க வேண்­டும்,” என்று அவர் விளக்­கி­னார்.

இப்­போது அமே­சான் போன்ற இணை­யத் தளங்­க­ளி­லும் வறட்டி விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது. வியா­பார நோக்­கத்­து­டன் வறட்டி தொழில் விரி­வ­டைந்து வரு­கிறது.

“பொது­வாக வறட்டி தட்­டு­வது நல்ல உடற்­ப­யிற்சி. வறட்­டி­யைத் தட்­டும்­போது சாணத்­தில் இருந்து ஏற்­ப­டக்­கூ­டிய ஒரு வகை வாயுவை சுவா­சிப்­ப­தால் பல நோய்­களை எதிர்க்­கக்­கூ­டிய ஆற்­றல் நம் உட­லில் ஏற்­படும் என்று கூறு­கி­றார்­கள்.

“கால்­கள் இரண்­டும் சாணத்தை மிதித்­துத் தர, கைகள் இரண்­டும் சாணத்தை வறட்­டி­யா­கத் தட்­டி­போட, காசு கைக்கு வரும்.

“பசு மாட்டை வளர்ப்­ப­வர்­கள் பசும்­பால் மட்­டு­மின்றி சாணத்­தை­யும் சார்ந்து இருக்­க­லாம். சுய­சார்­பு­டன் வாழ்க்­கையை ஓட்­ட­லாம்,” என தன்­னம்­பிக்­கை­யு­டன் கூறி­னார் திரு­மதி ஜோதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!