பணக்காரக் குழுக்களே ஆதிக்கம் செலுத்தும்: கிளோடியோ ரனியெரி

லெஸ்டர்: அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பணக்காரக் குழுக்களே இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று தாம் நம்புவதாக இப்பரு வத்துக்கான லீக் பட்டத்தை வென்றுள்ள லெஸ்டர் சிட்டியின் நிர்வாகி கிளோடியோ ரனியெரி கருத்துரைத்துள்ளார். “பெரிய அளவிலான பணம் இறைக்கப்படும்போது மிகுந்த வலிமைமிக்க குழுக்கள் உருவாக் கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இம்மாதிரியான வலிமைமிக்க குழுக்கள்தான் வெற்றி பெறுகின்றன. “அடுத்த பருவத்தில் மட்டு மின்றி, அடுத்த பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்,” என்றார் 64 வயது ரனியெரி. 20 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் யாரும் எதிர்பார்க்காத குழுக்களின் கையோங்கும் என்ற ரனியெரி, 1978ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் 1995ல் மகுடம் சூடிய பிளாக்பர்ன் ரோவர்ஸ் ஆகிய குழுக்களைச் சுட்டினார்.

இந்த இரு குழுக்களும் லீக் பட்டம் வென்றதை அடுத்து, லீக் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் ஜாம்பவான் அணிகள் இல்லாத மற்ற குழுக்கள் வெல்வதற்கு எத்தனை ஆண்டுகளாகிவிட்டன என்று ரனியெரி கேள்வி எழுப்பி னார். லெஸ்டர் சிட்டி அணியின் மொத்த மதிப்பு 60 மில்லியன் பவுண்ட்டுக்கும் குறைவு. மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, செல்சி, ஆர்சனல் போன்ற குழுக்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் குறைவு.

லெஸ்டர் சிட்டி நிர்வாகி கிளோடியோ ரனியெரி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’