இறுதிப் போட்டியில் சானியா- ஹிங்கிஸ்

மட்ரிட்: மட்ரிட் பொது விருது டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சானியா மிர்சா=சுவிட்சர் லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி (படம்) இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா=மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6=2, 6=0 என்ற நேர் செட்டில் வானியா கிங் (அமெரிக்கா)=அலா குட்யாட் செவா (ரஷ்யா) ஜோடியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சானியா மிர்சா=ஹிங்கிஸ் ஜோடி பிரான்ஸ்சின் கரோலின் கார்சியா=கிறிஸ்டினா மாட்னோவிச் ஜோடியைச் சந்திக்கிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் சுலோவாக்கியா வீராங்கனை டோமினிகா சிபுல்கோவா 6=1, 6=1 என்ற நேர் செட்டில் அமெரிக்க வீராங்கனை லூயிசா ‌ஷிரிகோவை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி னார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு வெற்றியாளர் ஆண்டி மர்ரே 6=3, 6=2 என்ற நேர்செட்டில் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!