மேல்முறையீடு தோல்வி; பதவி விலகும் ஃபிளாட்டினி

ஸுரிக்: காற்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தமக்கு எதிராக விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த யுயே ஃபா தலைவர் மிஷல் பிளாட்டினி, மேல்முறையீடு தோல்வி அடைந் துள்ள நிலையில் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். தமது பெயருக்கு களங்கம் விளைவித்த இப்பிரச்சினைக்கு எதிராக சுவிட்சர்லாந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிளாட்டினியின் வாதத்தை விளையாட்டுத் துறைக்கான சமரச நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாதபோதிலும் அவரது தடை காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு அது குறைத் தது. அவருக்கு விதிக்கப் பட்டிருந்த 80,000 சுவிஸ் ஃபிரேங்ஸ் 60,000க்குக் குறைக் கப்பட்டது. இருப்பினும், சமரச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பிளாட்டினி அதை மாபெரும் அநியாயம் என்று வர்ணித்தார். இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த மாதம் பிரான்சில் நடைபெறும் ஐரோப்பிய கிண்ணப் போட்டியில் பிளாட்டினி எவ்வித பொறுப்பும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next