மேன்யூ நிர்வாகி மொரின்யோ

மான்செஸ்டர்: ஜோசே மொரின்யோவை (படம்) அதன் புதிய நிர்வாகியாக மான்செஸ்டர் யுனைடெட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட லூயிஸ் வேன் ஹாலுக்குப் பதிலாக மொரின்யோ பதவியேற்க இருக்கிறார். போர்ச்சுகீசியரான 53 வயது மொரின்யோ மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளதாக யுனைடெட் தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ளது. குறைந்தது 2020ஆம் ஆண்டு வரை யுனைடெட்டின் நிர்வாகியாக இருக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மான்செஸ்டர் யுனைடெட் தெரிவித்துள்ளது. “மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்பது காற்பந்து உலகில் கௌரவமிக்க ஒன்றாகும். யுனை டெட் உலகெங்கும் போற்றப்படும் குழு. இதன்பால் ரசிகர்கள் கொண்டுள்ள ‘காதல்’ ஒப்பாரும் மிக்காருமற்றது.

“ஓல்ட் டிராஃபர்ட்டுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவு இருப்பதை நான் எப்போதும் உணர்ந் துள்ளேன். காற்பந்து நிர்வாகி என்கிற முறையில் இந்த விளையாட்டரங்கில் எனக்குப் பல மறக்கமுடியா, முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை இன்னும் என் மனத்திரையில் நீங்காமல் இருக்கின்றன. யுனைடெட் குழுவின் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் நல்லுறவு இருந்து வருகிறது. யுனைடெட்டின் நிர்வாகியாகப் பணியாற்ற நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டி ருக்கிறேன்.

வரும் ஆண்டுகளில் யுனைடெட் ரசிகர்களின் பேராதரவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கப் போகிறேன்,” என்று மொரின்யோ பெருமிதத்துடன் தெரிவித்தார். மொரின்யோவுக்கு ஓராண்டு வருமான மாக 15 மில்லியன் பவுண்ட் வரை (30.22 மில்லியன் வெள்ளி) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சாம்பியனஸ் லீக்குக்குத் தகுதி பெற யுனைடெட் தவறியிருக்கும் போதிலும் யுனைடெட்டுக்குப் புதிய ஆட்டக்காரர்களை வாங்கி அணிக்கு வலுசேர்க்க 200 மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா