பிரெஞ்சு ஓபன் விருதால் முழுமையடைந்த ஜோகோவிச்சின் கிராண்ட்சிலாம் பட்டங்கள்

பாரிஸ்: டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தனது 12வது கிராண்ட்சிலாம் பட்டமாக பிரெஞ்சு ஓபன் வெற்றி யாளர் பட்டத்தை வென்றுள்ளார். செர்பியாவைச் சேர்ந்த அவர் 3-6, 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் இரண்டாம் நிலை வீரரான ஆண்டி மர்ரேவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் பட்டத்தைத் முதல் முறையாக கைப்பற்றி உள்ள அவர், இதன்மூலம் அனைத்துக் கிராண்ட்சிலாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) ஒரே நேரத்தில் வைத்துள்ள மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதேபோல், அனைத்து கிராண்ட்சிலாம் பட்டங்களையும் வென்ற 8வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோஜர் பெடரர், ரபெல் நடால், ராய் எமர்சன், ராட்லாவர், பிரெட் பெர்ரி, ஆந்த்ரே அகாசி, டான்பட்ஜ் ஆகியோர் 4 கிராண்ட்சிலாம் பட்டங்களையும் வென்று இருந்தனர். மேலும் 12வது கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றியதால், அவர் ராட்லாவரை முந்தி ராய் எமர்சனுடன் இணைந்து 3வது இடத்தைப் பிடித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு