ரோஜர் ஃபெடரர் வீழ்ந்தார்

லண்டன்: விம்பிள்டன் ஆடவர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பின் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஃபெடரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் அவருக்கு ரயோனிக் கடும் சவாலாக விளங்கினார்.

முதல் செட்டில் மூன்றாம் நிலையில் இருக்கும் ஃபெடரருக்கு ஆறாம் நிலை வீரரான ரயோனிக் அதிர்ச்சி அளித்ததுடன் 6-3 என எளிதில் கைப்பற்றினார். இதனால் அடுத்த செட்டில் ஃ படரர் சுதாரித்துக்கொண்டு விளையாடத் தொடங்கினார்.

இருப்பினும் கனடிய வீரர் கடும் நெருக்கடி கெடுக்கவே ஆட்டம் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இறுதியில் ஃபெடரர் 7(7)-6(3) என அந்த செட்டைக் கைப்பற்றினார். அடுத்த செட்டையும் 6-4 என ரயோனிக்கை ஃபெடரர் வீழ்த்தினார். மூன்று செட்டுகள் முடிவில் ஃபெடரர் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபெடரர் அந்த செட்டில் 5-7 என தோல்வியைத் தழுவினார். இதனால் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் களம் இறங்கினர். இதிலும் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை.

இறுதியில் ரயோனிக் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரர் 18வது பட்டத்திற்காகப் போராடினார். இவர் கடைசியாக 2012ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்றார். அதன்பின் அவரால் ஒரு கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தைக்கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!