வெளிநாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆகப் பெரிய சீனக் குழு

பெய்ஜிங்: வெளிநாட்டில் நடை பெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஆக அதிக வீரர்களை சீனா இம்முறை அனுப்பி வைக்கிறது. நாளை மறுநாள் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 416 வீரர்கள் சீனாவைப் பிரதிநிதிப்பர். 2008ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அந்நாடு மற்ற நாடுகளைவிட ஆக அதிகமாக 100 பதக்கங் களை வென்றது. ஆனால் இம்முறை சீனாவால் அந்தச் சாதனையை மீண்டும் நிகழ்த்த முடியாது என்று முன் னுரைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு சீனா 89 பதக்கங் கள் மட்டுமே வெல்லும் என்று டார்ட்மத் கல்லூரி நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சீனா 38 தங்கப் பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்கா 48 தங்கப் பதக்கங்களை வெல்லும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் ஜொலித்து தங்கம் வென்ற சீன வீரர்கள் இம்முறை வயது முதிர்ச்சி அடைந்து வருவதால் அவர்களால் பதக்கம் வெல்ல முடியுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சீனா ஆதிக்கம் செலுத்தி வந்த விளையாட்டுகளில் இம்முறை மற்ற நாடுகள் கடுமையான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!