தங்கத்துடன் பிரியாவிடை

ஒலிம்பிக் போட்டிகளின் ஆகச் சிறந்த விளையாட்டாளர் எனப் பெயர் பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ், 31, தாம் பங்கேற்ற கடைசி போட்டி யிலும் தங்கம் வென்று, தான் எப்போதுமே சிங்கம்தான் என்பதை நிரூபித்தார். ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி களில் கடைசியாக நேற்று இடம் பெற்ற 4x100 மீ. பலபாணி அஞ்சல் நீச்சலில் ஃபெல்ப்ஸ், ரையன் மர்ஃபி, கோடி மில்லர், நேதன் அட்ரியன் ஆகியோர் அடங்கிய குழு 3 நிமிடம் 27.95 வினாடிகளில் பந்தயத்தை முடித்து, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதன்மூலம் ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸ் வென்ற தங்கங்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக 28 பதக்கங் களை அவர் வென்றுள்ளார். இந்தப் போட்டியின்போது ரையன் மர்ஃபி 100 மீ. மல்லாந்து நீச்சலில் புதிய உலக சாதனைப் படைத் தார். 51.85 வினாடி களில் அந்தத் தூரத்தை அவர் கடந்தார். சக அமெரிக்கரான ஏரன் பியர்சல் 2009ல் 51.94 வினாடி களில் கடந்திருந்ததே முந்தைய சாதனை. பின்னர் ஒலிம்பிக் வெற்றியாள ரான பிரிட்டனின் ஆடம் பீட்டி நெஞ்சு நீச்சலில் 56.59 வினாடி களில் 100 மீ. தூரத்தைக் கடந்து ஆறாம் நிலையில் இருந்த தமது குழுவை முதலிடத்திற்கு முன்னேற் றினார்.

ஆயினும், மூன்றாவதாக ஃபெல்ப்ஸ் குளத்தில் குதித்ததும் அரங்கம் பார்வையாளர்களின் உற் சாக ஒலியால் அதிர்ந்தது. அவர் களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அமெ ரிக்கக் குழுவை மீண்டும் முதல் நிலைக்குக் கொண்டு வந்தார் ஃபெல்ப்ஸ். கடைசி 100 மீ. தூரத்தை எதேச்சைபாணியில் மிக வேகமாகக் கடந்து அமெரிக்கா வின் ஆதிக்கத்தை உறுதிச் செய் தார் நேதன் அட்ரியன். பிரிட்டனுக்கு வெள்ளியும் ஆஸ்திரேலியாவுக்கு வெண்கலமும் கிடைத்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!