கபடியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி

அகமதாபாத்: மூன்றாவது உலகக் கிண்ணக் கபடிப் போட்டியில் நடப்பு வெற்றியாளர் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் எதிர்பாராத் தோல்வி அடைந் துள்ளது. உலகக் கிண்ணக் கபடிப் போட்டிக்கான தொடக்க விழா நேற்று முன்தினம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியாவுடன் இந்தியா மோதி யது. ரசிகர்களின் பேராதரவுடன் தொடக்கத்திலிருந்து சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி 23-17, 28-25, 30-27 என்று தொடர்ந்து முன்னிலை வகித் தது. ஆனால் கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் நிலைமை தலைகீழாக மாறியது.

தென்கொரிய வீரர் ஜான் குன் லீ இந்திய வீரர்கள் மூவரை அதிரடியாக வெளியேற்றி புள்ளிக் கணக்கை 30-30 என்று சமன் செய்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் மீள்வதற்குள் தென்கொரியா மேலும் சில இந்திய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தது. இறுதியில் தென்கொரியா 34-32 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்திய வீரரைச் சுற்றி வளைத்து மடக்கும் முயற்சியில் ஈடுபடும் தென்கொரிய அணியினர். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!