அஸ்வின் இல்லாத குறையைப் போக்கிய ஹர்த்திக் பாண்டியா

தர்மசாலா: நியூசிலாந்திற்கு எதி ரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் இல்லாத தால் இந்தியா எதிரணியின் விக் கெட்டுகளைக் கைப்பற்றுவது கடினம் எனக் கூறப்பட்ட நிலை யில், மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதைப் பொய்யாக்கி உள்ளார் இந்தியாவின் அறிமுக பந்து வீச்சாளர் பாண்டியா (படம்). பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப் பட்டிருந்தது. இவர்கள் இருவருக்கும் பதிலாக ஹர்த்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பூவா தலையா வென்ற இந்தியா, பந்துவீச்சைத் தேர்ந் தெடுத்தது. தொடக்க ஓவர்களை உமேஷ் யாதவ், பாண்டியா வீசினர். இந்தியாவின் பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர் கப்டில் 12 ஓட்டங்களில் பாண்டியா ஓவரில் ஆட்டமிழந்தார். அஸ்வின் இல்லாத குறையை நீக்கியது போல பாண்டியா தனது அடுத்தடுத்த ஓவரில் ஆண்டர்சன், ரோஞ்சி இருவரையும் வீழ்த்தி னார். வில்லியம்ஸன், டெய்லர் இரு வரையும் உமேஷ் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்தார். நிஷாம், சாண் ட்னர் ஆகியோர் விக்கெட்டுகளை ஜாதவ் கைப்பற்றினார். ஜாதவ் கைப்பற்றினார். முடிவில் நியூசிலாந்தை 43.5 ஓவரில் 190 ஓட்டங்களுக்குச் சுருட்டியது இந்தியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!