‘கடைசிக் கட்ட பந்துவீச்சு முன்னேற உதவும்’

கோல்கத்தா: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே கோல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங் கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இந்தியா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளுக்கு 321 ஓட்டங் கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் கடைசிக் கட்ட பந்துவீச்சு சற்று பலவீனமாக இருந்ததால் இங்கிலாந்து அணி எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஓட்டங்களைச் சேர்த்தது. மூன்றாவது போட்டியை இங்கி லாந்து அணி வென்றபோதிலும் தொடரை இந்தியா 2-1 என்று வென்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!