கானாவிற்கு ஏற்றம் தந்த அயூ சகோதரர்கள்

போர்ட் ஜென்டில்: கபான் நாட்டில் நடைபெற்று வரும் ஆப்பிரிக்கக் கிண்ணக் காற்பந்துத் தொடரில், ஜோர்டன் அயூ, ஆண்ட்ரே அயூ சகோதரர்கள் ஆளுக்கு ஒரு கோலை அடிக்க, கானா அணி 2-1 என்ற கோல் கணக்கில் காங்கோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதி ஆட்டத் தில் ஏழு முறை கிண்ண வெற்றி யாளரான எகிப்து 1-0 என்ற கோல் கணக்கில் மொரொக்கோ அணியைத் தோற்கடித்தது. கடந்த 31 ஆண்டுகளில் எகிப்து விடம் மொரோக்கோ வீழ்ந்தது இதுவே முதன்முறை. நாளை மறுநாள் அதிகாலை நடக்கவிருக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் புர்கினோ ஃபாசோவுடன் எகிப்து மோது கிறது. அதற்கு மறுநாள் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் கானா-கெமரூன் அணிகள் மோத இருக்கின்றன. இறுதிப் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!