யுவென்டஸ் மண்ணில் பார்சிலோனா பலப்பரிட்சை

டூரின்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தின் காலிறுதி முதல் சுற்றில் பலம் பொருந்திய யுவென் டஸ், பார்சிலோனா குழுக்கள் இன்று பின்னிரவு மோதுகின்றன. ஆனால், தொடர் வெற்றிகளைச் சந்தித்து வந்த இவ்விரு குழுக் களுமே கடந்த வாரம் நடந்த ஆட்டங்களில் தோல்வியைத் தழுவின. கடந்த 17 ஆட்டங்களில் தோல்வியைச் சந்திக்காத யுவென் டஸ், கோப்பா இத்தாலி தொடரில் நேபோலி குழுவிடம் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் நடந்த கடைசி 23 ஆட்டங்களில், 21 வெற்றிகளை வசப்படுத்திய யுவென்டஸ், 2 போட்டிகளில் சமநிலை கண்டது. சாம்பியன்ஸ் லீக் தொடரின் தற்போதைய பருவத்தில் யுவென் டஸ் தோல்வியைச் சந்திக்காத நிலையில், பார்சிலோனா இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இத்தொடரில் எதிரணி மண் ணில் நடந்த இரு ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டியிடமும் பிஎஸ்ஜியிடமும் வீழ்ந்தது பார்சிலோனா.

மாலகாவிற்கு எதிரான ஆட்டத்தின்போது தப்பாட்டம் காரணமாக இரண்டு மஞ்சள் அட்டை பெற்ற நெய்மார், இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!