சமநிலையில் முடிந்த மான்செஸ்டர் குழுக்களின் மோதல்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து, சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பை உறுதிசெய்யவேண்டும் என்ற மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முயற்சி ஈடேறாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. எட்டிஹாட் அரங்கில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடந்த மான்செஸ்டர் சிட்டி = மான்செஸ்டர் யுனைடெட் குழுக்களுக்கு இடை யிலான ஆட்டம் கோலேதுமின்றி சமநிலையில் முடிந்தது. இதை அடுத்து, சிட்டி 65 புள்ளிகளுடன் நான்காம் நிலையில் நீடிக்கிறது. அதைவிட ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள யுனைடெட் ஐந்தாம் இடத்தில் தொடர்கிறது.

ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் சிட்டி ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோவைக் காலிடறி கீழே விழச் செய்ததால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார் யுனை டெட் வீரர் மருவான் ஃபெலைனி. ஆயினும், அடுத்த நிமிடத்திலேயே அகுவேரோவை மீண்டும் தலை யால் முட்டியதால் சிவப்பு அட்டை காட்டி ஃபெலைனியைத் திடலை விட்டு வெளியேற்றினார் நடுவர். இதில் ஃபெலைனி மீது தவறு இருந்ததை ஒத்துக்கொண்ட யுனைடெட் நிர்வாகி மொரின்யோ, இருந்தாலும் அவரை வெளியேற்றும் வஞ்சக எண்ணத்துடன் அகு வேரோ நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

நடுவர் தமக்குச் சிவப்பு அட்டை காட்டியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் மருவான் ஃபெலைனி (இடமிருந்து 3வது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!