ரேஷ்ஃபர்ட் கோல்; மேன்யூ வெற்றி

ஸ்பெயின்: யூரோப்பா லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் செல்ட்டா விகோவை மான்செஸ்டர் யுனைடெட் 1=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் இக்குழுக்கள் மோதின. எதிரணி மண்ணில் நடந்த ஆட்டத்தில் மேன்யூவின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் அந்த ஒரு கோலைப் புகுத்தினார். காற்பந்து விளையாட்டில் முன்னேறி வரும் செல்ட்டா வீகோ குழு, முதல் பாதி ஆட்டத்தில் மேன்யூவைத் திணறடித்தது. முதல் பாதி ஆட்டத்தில் மேன்யூவின் கோல் போடும், மூன்று முயற்சிகளையும் செல்ட்டா வீகோ குழுவின் கோல் காப்பாளர் செர்ஜியோ அல்வரேஸ் சிறப்பாக தடுத்துவிட்டார். ஆனால் பிற்பாதி ஆட்டத்தின் போது, யுனைடெட் குறைந்த பந்து களை மட்டுமே கையாண்டாலும் 67வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ-கிக்' வாய்ப்பைப் பயன்படுத்தி பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார் ரேஷ்ஃபர்ட்.

மேன்யூவின் ரேஷ்ஃபர்ட் உதைத்த பந்து செல்ட்டாவின் கோல் காப்பாளரை ஏமாற்றி கோலாக மாறியது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!