பாகிஸ்தானில் கொண்டாட்டம், இந்தியாவில் ஆவேசம்

ஐசிசி வெற்றியாளர் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில இந்திய ரசிகர்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளை உடைத்தும், இந்திய வீரர்களின் உருவப் படங்களை எரித்தும் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் சில ரசிகர்கள் இந்திய வீரர்களின் உருவப்ப டங்களை வீதியில் நின்று எரித்துள்ளனர். மேலும், சிலர் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து, அணிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதற்கு முந்தைய காலங்களில் இந்திய அணி தோல்வியடைந்தால் சில ரசிகர்கள் வீரர்களின் வீட்டில் கல் எறிவது வழக்கம். தற்போது, அதே போல நிகழக்கூடாது என்பதற்காக முக்கிய வீரர்களின் வீடுகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள டோனியின் இல்லத்தின் முன் அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாட (இடது), இந்தியா வில் ஆவேசமே மேலோங்கியது. படம்: ராய்ட்டர்ஸ், ஏப்பி