சுடச் சுடச் செய்திகள்

‘கும்ளேயின் பதவியை நீட்டிப்பதில் கோஹ்லிக்கு முக்கிய பங்கு இருக்கும்’

புதுடெல்லி: கும்ளேவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சி யாளராக நியமிக்கும் முடிவில் விராத் கோஹ்லிக்கு முக்கிய பங்கு இருக்கும் என நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளேயின் பதவிக்காலம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைந்தது. அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படலாம் என்ற செய்தி வெளியானது. அப்போது தான் விராத் கோஹ்லிக்கும், கும்ளேவிற்கும் இடையில் மோதல் இருப்பதாகச் செய்தி வெளியானது. இதனால் கும் ளேவைப் பயிற்சியாளராக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. விராத் கோலி சம்மதம் இருந்தால் மட்டுமே அனில் கும்ளேயின் பதவி நீட்டிக்கப்படும் என்று பொதுவாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐ-யின் நிர்வா கக் குழுவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நிர்வாகக்குழு சார்பில் கூறப்படுவதாக வெளி வந்துள்ள செய்தியில், “இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் அல்லது கும்ளேயின் பதவிக் காலத்தை நீட்டிப்பதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், கும்ளேயின் பதவிக்காலத்தை நீட்டித்தால், விராத் கோஹ்லிக்கும் அவருக் கும் இடையிலான உறவு சுமுகமாகச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். “கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், லஷ்மண் மற்றும் கங்குலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் வளர்ச்சியை கணக்கில் கொண்டுதான் முடிவு எடுப்பார்கள். “இவர்களுடன் பிசிசிஐ-யின் சிஇஓ ராகுல் ஜோரியும் உள்ளார். பயிற்சியாளர் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon