காற்பந்து ரசிகர்களுக்குப் பெருவிருந்து

மாஸ்கோ: எந்த ஓர் அனைத்துலக காற்பந்து ஆட்டக்காரருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடவேண்டும், கிண்ணம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதே ஆக உயர்ந்த இலட்சியமாக இருக்கும். அந்த வகையில், இப்போது உலகின் முன்னணி காற்பந்து ஆட்டக்காரர்களாகத் திகழும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மார் ஆகியோர் இம்முறை எப்படியும் கிண்ணத்தைக் கைப் பற்ற வேண்டும் என்ற தீரா வேட் கையுடன் உள்ளனர்.

குழு அளவிலான போட்டிகளில் உச்சத்தில் இருந்தாலும் அம்மூவ ரில் ஒருவர்கூட இன்னும் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. 2014ஆம் ஆண்டில் பிரேசிலில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடந்தபோது கிண்ணத்தை வெல்ல அந்நாட்டிற்கு நல்ல வாய்ப்பிருந் தது. ஆயினும், கொலம்பியாவிற்கு எதிரான காலிறுதியில் நெய்மார் காயமடைந்து வெளியேற, அந்தப் பின்னடைவு அரையிறுதியில் அப் பட்டமாகத் தெரிந்தது. அரையிறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படுதோல்வி கண்டு பெருத்த அவ மானம் அடைந்தது பிரேசில்.

மேலும் செய்திகளுக்கு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!