48 அணித் திட்டத்தைக் கைவிட்ட ஃபிஃபா

ஸ`ரிக்: 2022ஆம் ஆண்டில் 48 குழுக்கள் போட்டியிடும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை கத்தாரில் நடத்த அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) திட்டமிட்டிருந்தது.

ஆனால் அந்தத் திட்டத்தைத் தற்போது அது கைவிட்டுள்ளது.

 

இது ஃபிஃபாவின் ஜியானி இன்ஃபன்டினோவுக்கு ஏற்பட்டி ருக்கும் பின்னடைவு எனக் கருதப்படுகிறது.