வெற்றியை சுவைத்த லிவர்பூல்; இலவச மீன் தலைக்கறியை ருசித்த ரசிகர்கள்

சிங்கப்பூர்: சாம்பியன்ஸ் லீக் கிண் ணத்தை லிவர்பூல் அணி வென் றால் லிவர்பூல் சீருடையை அணிந்து வரும் வாடிக்கையாளர்க ளுக்கு இலவசமாக மீன் தலைக் கறி வழங்குவதாக ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ‘காயத்ரி உணவகம்’ நான்கு நாட்களுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்தச் சலுகைக்கான அறி விப்பை அதன் ஃபேஸ்புக் பக்கத்தி லும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்றிலும் அவ்வுணவகம் தெரி வித்தது.

மட்ரிட்டில் உள்ள வாண்டா மெட்ரோபொலிடானோ விளையாட் டரங்கத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 0=2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வீழ்த்தியதைத் தொடர்ந்து அந்த வாக்குறுதி நேற்று மக்கள் திரளுடன் பூர்த்தி செய்யப்பட்டது.

$25 மதிப்புள்ள ஒவ்வொரு மீன் தலைக் கறியும் லிவர்பூல் சீருடையை அணிந்து வந்த கிட்டத்தட்ட 500 வாடிக்கையாளர்க ளுக்கு வழங்கப்பட்டது என்றார் காயத்ரி உணவக உரிமையாளர் திரு சண்முகம் கணேசன், 57.

“பணத்தையோ லாபத்தையோ பொருட்படுத்தாமல் என் விருப்ப அணியின் வெற்றியைக் கொண் டாட வேண்டும் என்று விரும்பி னேன். லிவர்பூலின் மாபெரும் வெற்றியை ரசிகர்கள் மகிழ்ச்சியு டன் கொண்டாட என்னால் முடிந் ததைச் செய்தேன்,” என்றார் லிவர்பூலின் 47 ஆண்டு ரசிகரான கணேசன்.

தம் குடும்பத்தை அழைத்துச் சென்று இந்தச் சலுகையைப் பெற்றார் திரு டேவிட் கிங், 38.

“லிவர்பூலின் வெற்றியை வர் ணிக்க வார்தைகளே இல்லை. இறுதியாக 2005ஆம் ஆண்டில் இந்தக் கிண்ணத்தை வென்றோம். 14 ஆண்டுகளுக்குக் கடினமாக காத்திருந்து மீண்டும் உலகின் தலையாய கிண்ணங்களில் ஒன்றை வென்றுள்ளோம்,”

“சுவைமிக்க மீன் தலைக் கறியை என் குடும்பத்துடன் சாப் பிட்டு இந்த வெற்றியைக் கொண் டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் திரு டேவிட்.

இந்த வரிசையில் ‘கெ‌‌‌ஷுரினா கறி’ உணவகமும் இன்று காலை 11 முதல் இரவு 11 மணி வரை லிவர்பூல் சீருடையை அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கோழி பிரியாணி வழங்குவதாகத் தெரிவித்து உள் ளது.

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை லிவர்பூல் கைப்பற்றிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக காயத்ரி உணவகம் லிவர்பூல் சீருடை அணிந்து வந்த வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மீன்தலைக்கறி வழங்கியது. படம்: காயத்ரி உணவகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!