புயல் வேக பெல்ஜியம்; நிலைகுலைந்த ஸ்காட்லாந்து

கிளாஸ்கோ: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் சக்கைப்போடு போட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது ஸ்காட்லாந்தை 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.

இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பியக் கிண்ணப் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை பெல்ஜியம் வலுப்படுத்தியுள்ளது.

ஆட்டம் ஸ்காட்லாந்தில் நடைபெற்றபோதிலும் பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டம் தொடங்கிய ஒன்பது நிமிடங்களில் ரொமேலு லுக்காக்கு கோல் போட்டு பெல்ஜியத்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

இடைவேளைக்கு முன் பெல்ஜியம் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு ஸ்காட்லாந்தைத் திணறடித்தது.

பிற்பாதி ஆட்டத்திலும் ஸ்காட்லாந்து அணியால் பதிலடி கொடுக்காமல் போக, ஆட்டம் முடிய ஏறத்தாழ எட்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது டி பிரய்ன பெல்ஜியத்தின் நான்காவது கோலைப் போட்டு எதிரணியின் கதையை முடித்து வைத்தார்.

மற்றோர் ஆட்டத்தில் எஸ்டோனியாவை 4-0 எனும் கோல் கணக்கில் மிக எளிதில் நெதர்லாந்து ஓரங்கட்டியது.

நெதர்லாந்தின் முதல் இரண்டு கோல்களை ரயன் பேபல் போட்டார். மற்ற இரண்டு கோல்களை டிப்பாயும் வைனால்டமும் அடித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனியைத் தொற்கடித்த நெதர்லாந்து, அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.

“முதல் இரண்டு கோலைப் போட்டது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று பேபல் பெருமிதத்துடன் கூறினார்.

கடந்த வாரம் நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த ஜெர்மனி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் வெற்றியின் பாதைக்குத் திரும்பியுள்ளது.

பெல்ஃபாஸ்ட்டில் வடஅயர்லாந்தைச் சந்தித்த ஜெர்மனி 2-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

முற்பாதி ஆட்டத்தில் வடஅயர்லாந்துக்கு கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அவை அனைத்தையும் அக்குழு நழுவவிட்டது. இதற்காக வடஅயர்லாந்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு வருத்தப்பட வேண்டியிருந்தது.

இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.

பிற்பாதி ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை ஜெர்மனி கோல்களாக மாற்றி வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் 12 புள்ளிகள் பெற்று சி பிரிவில் ஜெர்மனி முன்னிலை வகிக்கிறது.

கோல் வித்தியாசத்தில் வடஅயர்லாந்தை அது இரண்டாவது இடத்துக்குத் தள்ளியுள்ளது.

இதற்கிடையே, தகுதிச் சுற்றில் குரோவேஷியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அசர்பைஜானுக்கு எதிரான ஆட்டத்தை குரோவேஷியா மிக எளிதில் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருகுழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் குரோவேஷியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து.

அதை நிதானமாக எடுத்து பந்தை வலைக்குள் சேர்த்தார் லூக்கா மோட்ரிச்.

ஆனால் கடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியடைந்த குரோவேஷியா வுக்கு அதிர்ச்சி காத்துக்

கொண்டிருந்தது.

சொந்த மண்ணில் விளையாடிய அசர்பைஜான் ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் கோல் போட்டு குரோவேஷியாவின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!