அர்டேட்டா: கிருமித்தொற்று மற்றவர்களுக்கும் பரவிடுமோ என அஞ்சினேன்

லண்­டன்: ஆர்­ச­னல் குழு­வின் நிர்­வா­கப் பொறுப்­பில் இருக்­கும் மிக்­கெல் அர்­டேட்டா தமக்கு ஏற்­பட்ட கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து தான் முழு­மை­யாக குண­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் குழுவை நிர்­வ­கிக்­கும் பணி­யில் மீண்­டும் ஈடு­ப­டத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார். ஆனால், ஒரு கட்­டத்­தில் தம்­மால் மற்­ற­வர்­க­ளுக்­கும் இந்­தக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ எனத் தாம் அஞ்­சி­ய­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆர்­ச­னல் குழு மான்­செஸ்­டர் சிட்டி குழு­வு­டன் மோது­வ­தற்கு தயா­ரா­கிக் கொண்­டி­ருந்த நிலை­யில் இம்­மா­தம் 12ஆம் தேதி அர்டேட்டாவுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று கண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால், பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டன.

யூரோப்பா லீக் காற்­பந்­துப் போட்­டி­களில் பிப்­ர­வரி மாத இறு­தி­யில் கிரேக்க நாட்­டின் ஒலிம்­பி­யாக்­கோஸ் குழு­வு­டன் ஆர்­ச­னல் மோதி­ய­போது தமக்கு கிரு­மித் ெ­தாற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று அர்ேட்­டடா கூறி­னார்.

“இப்­பொ­ழுது நான் முழு­மை­யாக குண­ம­டைந்­து­விட்­டேன்.

“ஒலிம்­பி­யாக்­கோஸ் குழு­வி­லி­ருந்து எங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று தொலை­பேசி வழி தெரி­விக்­கப்­பட்­ட­போது அதற்­கான அறி­குறி என்­னி­டம் தென்­பட்­டது உண்­மையே.

“என்னவென்று தெரி­ய­வில்லை, ஆனால் எனக்­குள் ஏதோ ஒன்று இந்­தக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கத் தோன்­றி­யது.

“அப்­பு­றம்­தான் எனக்­குத் தோன்­றி­யது. ஐயோ, இங்கு எல்ேலா­ருக்­கும் இந்­தக் கிரு­மித்­தொற்று பர­வி­யி­ருக்­கக்­கூ­டும் என்­றும் யார் யார் நம்­மு­டன் தொடர்­பில் இருந்­தி­ருக்­கின்­ற­னர் என்று எண்ண ஆரம்­பித்­த­தும் அவர்­களில் யார் யார் நமது சொந்­தங்­கள் என்­றும் யோசிக்­கத் தோன்­றி­யது. அந்த சம­யம்­தான் அச்­சம் தலை­தூக்­கி­யது. அறி­கு­றி­க­ளைப் பொறுத்­த­வரை, எனக்கு சாதா­ரண கிரு­மித்­தொற்­றா­கவே இருந்­தது. மூன்று, நான்கு நாட்­க­ளுக்கு சிறி­த­ளவு காய்ச்­சல், வறட்டு இரு­மல் என சிறிது சிர­ம­மாக இருந்­தது, அவ்­வ­ள­வு­தான்,” என்று தமது சமூக வலைத்தளத்தில் பதிவு ெசய்­துள்­ளார். அர்டேட்டாவின் மனைவி, பணிப்­பெண் ஆகி­யோ­ருக்­கும் இந்­தக் கிரு­மித்­தொற்று கண்­டி­ருந்த நிலை­யில் அவ­ரின் மூன்று பிள்­ளை­க­ளுக்கு ஆண்­ட­வன் புண்­ணி­யத்­தில் எந்த பாதிப்­பும் இல்லை என்று கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!