46 ஆண்டுகளுக்குப் பிறகு கிண்ணம் வென்ற வெஸ்ட் ஹேம்

பிராக்: இவ்வாண்டின் யூயேஃபா கான்ஃபிரன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான வெஸ்ட் ஹேம் யுனைடெட்.

இது, இக்குழு கடந்த 46 ஆண்டுகளில் கைப்பற்றியிருக்கும் முதல் கிண்ணம்.

செக் குடியரசுத் தலைநகர் பிராக்கில் நடைபெற்ற கான்ஃபிரன்ஸ் லீக் போட்டியின் இறுதியாட்டத்தில் வெஸ்ட் ஹேம், இத்தாலியின் ஃபியொரென்டினாவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

அனைத்து கோல்களும் ஆட்டத்தின் பிற்பாதியில் விழுந்தன.

62வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி வெஸ்ட் ஹேமை முன்னுக்கு அனுப்பினார் சயீத் பென்ராமா.

67வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் ஃபியொரென்டினாவின் கியாக்கோமோ பொனாவெஞ்சுரா.

பிறகு ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் வெற்றி கோலைப் போட்டார் வெஸ்ட் ஹேமின் ஜேரட் போவன்.

கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லிக் பருவத்தில் பெரிதும் சிரமப்பட்டது வெஸ்ட் ஹேம்.

அப்படியிருந்தும் கான்ஃபிரன்ஸ் லீக்கில் வெற்றிகண்டு பல ஆண்டுகளாக கிண்ணம் வெல்லாத குறையைத் தீர்த்துவைத்தது குழுவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!