லாரியில் ஏற்றிய மரத்தண்டு விழுந்ததில் 28 வயது பங்ளாதேஷ் ஊழியர் மாண்டார்

மரத்­தண்­டுப் பகுதி லாரி­யில் ஏற்­றப்­பட்­ட­போது அது நகர்ந்து பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வரை இடித்­த­தில் அவர் விழுந்து தலை­யில் அடி­பட்­டது. உயி­ரி­ழந்த அந்த 28 வயது ஊழி­ய­ரைச் சேர்த்து இது­வரை சிங்­கப்­பூ­ரில் 43 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­துள்­ளன.

இதற்­கு­முன் 2017ஆம் ஆண்­டில் பதி­வான 42 வேலை­யிட மர­ணங்­கள், எண்­ணிக்­கை­யில் அதி­க­மாக இருந்து வந்த நிலை­யில் இவ்­வாண்­டின் எண்­ணிக்கை அதை மிஞ்­சி­விட்­டது. 2021ஆம் ஆண்­டில் 37 வேலை­யிட மர­ணங்­களும், 2020ல் 30 மர­ணங்­களும், 2019ல் 39 மர­ணங்­களும் நிகழ்ந்­தி­ருந்­தன.

உயி­ரி­ழந்த பங்­ளா­தேஷ் ஊழி­யர், 1003 தோ பாயோ தொழில்­துறை பேட்டை அருகே தோ பாயோ ஈஸ்ட் ரோட்­டில் நேர்ந்த இந்த உயிர்க்­கொல்லி விபத்­தில் சிக்­கி­ய­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது. நேற்று முன்­தி­னம் பிற்­பகல் 3.30 மணி­ய­ள­வில் சம்­ப­வம் நடந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஊழி­யர் ‘பென்டா லேன்ட்ஸ்­கேப்’ நிறு­வ­னத்­தால் நிய­மிக்­கப்­பட்­ட­வர் என்­றும் மரம் வெட்­டும் பணி­க­ளுக்­குப் பிறகு அங்­குள்ள மரத்­தண்­டு­களை வண்­டி­யில் ஏற்­று­வ­தில் அவர் ஈடு­பட்­டி­ருந்­தார் என்­றும் அறி­யப்­படு­கிறது.

லாரி­யில் உள்ள பாரந்­தூக்­கிக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி மரத்­தண்­டு­கள் தூக்­கப்­பட்­டன. அப்­போது ஒரு மரத்­துண்டு கயிற்­றி­லி­ருந்து விழுந்து ஊழி­யரை இடித்­த­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அந்த ஊழி­யர் பின்­னர் உயி­ரி­ழந்­தார்.

விபத்து தொடர்­பாக மனி­த­வள அமைச்சு விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது. அத்­து­டன் ‘பென்டா லேட்ன்ஸ்­கேப்’ மரம் வெட்­டும் மற்­றும் வண்­டி­யில் ஏற்­றும் பணி­களை நிறுத்தி வைக்­கு­மாறு உத்­த­ர­வும் இட்­டுள்­ளது. வேலை­யிட மர­ணங்­களில் அண்­மைய கால­மாக இருந்து வரும் அதி­க­ரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த, மனி­த­வள அமைச்சு மேலும் கடு­மை­யான தண்­ட­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யதை அடுத்து நேற்று முன்­தி­னம் மீண்­டும் ஓர் ஊழி­யர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

ஜூன் மாதம் முதல் பாது­காப்­புக் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களின்­போது கண்­டு­பி­டிக்­கப்­படும் விதி­மீ­றல்­க­ளுக்கு விதிக்­கப்­படும் அப­ரா­தத் தொகை இரு­ம­டங்­கா­கி­யது. மேலும், கடு­மை­யான அல்­லது உயி­ரைப் பறித்த வேலை­யிட சம்­ப­வத்­திற்­குப் பிறகு, நிறு­வ­னத்­தி­டம் கடு­மை­யான விதி­மீ­றல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால் மூன்று மாதம் வரை புதிய வெளி­நாட்டு ஊழி­யர்­களை நிறு­வ­னம் நிய­மிக்­கத் தடை விதிக்­கப்­படும். இது செப்­டம்­பர் 1 முதல் அடுத்த பிப்­ர­வரி 28 வரை பாது­காப்பை உச்­ச­நி­லை­யில் வைத்­திட அமல்­ப­டுத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!